"மேலும் 2102 வங்கிக் கிளைகளில் வருமான வரி செலுத்தலாம்"

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்தியாவில் உள்ள 133 நகரங்களில் மேலும் 2100 வங்கிக் கிளைகளில் வருமான வரிசெலுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நடந்த கேள்வி நேரத்தில் எழுப்பப்பட்டகேள்விக்கு மத்திய நிதித் துறை இணை அமைச்சர் வி. தனஞ்செய குமார் எழுத்து மூலம்அளித்த பதில்:

இந்தியாவில் பொதுத் துறை வங்கிகள் மூலம் வருமான வரி வசூலிக்கப்படுகிறது.தற்போது கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்ட மேலும் 2102 வங்கிக் கிளைகளிலும் வருமானவரி செலுத்தலாம். ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இது அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் வருமான வரி அலுவலகத்தில் நெரிசலைத் தவிர்க்க வங்கிகளிலேயேவருமான வரிக் கணக்கை சமர்ப்பிப்பதற்கான வசதியை ஏற்படுத்துவது குறித்துஇதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

கள்ள நோட்டுக்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த இந்திய ரூபாய் நோட்டுக்களில் ரகசியபாதுகாப்பு குறிகளை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராய உயர் மட்டக் குழுஅமைக்கப்பட்டுளது.

நிதித் துறை, உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில்தலைமையகத்தைச் சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட இக் கமிட்டி விரைவில் தனதுஅறிக்கையைச் சமர்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அமைச்சர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+