விரைவில் தமிழ்த் தீவிரவாதிகள் விடுதலை..?!
வீரப்பன் கோரிக்கைகளில் முக்கியமான கோரிக்கை..சேலம், திருச்சி மத்திய சிறையில் உள்ள தமிழ் தீவிரவாதிகள் ஐந்து பேரை விடுதலை செய்ய வேண்டும்என்பது.
இந்த கோரிக்கை பற்றி மிகத் தீவிரமாக யோசித்த தமிழக அரசு, தீவிரவாதிகளை ஜாமீனில் விடுதலை செய்யலாம் என்று அதற்கான முயற்சியில்இறங்கியது. தீவிரவாதிகள் ஜாமீனில் வெளியே வரமாட்டோம். தங்கள் மீதுள்ள வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெற வேண்டும் என்றனர்.
தமிழ் தீவிரவாதிகளான சத்யமூர்த்தி, மணிகண்டன், முத்துக்குமார், வெங்கடேசன், பொன்னிவளவன் ஆகிய ஐந்து பேர் மீதுள்ள தடா வழக்குகளை வாபஸ் வாங்கஅரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த தீவிரவாதிகள் மீது பல மாவட்டங்களில் பல நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை பொது நலன் கருதி வாபஸ் பெற வேண்டும் என்று மனுத்தாக்கல்செய்யப்பட்டது.
அந்த நீதிமன்றங்களும் அனுமதியளித்தன. தடா வழக்கு வாபஸ் பெற்றால் மட்டும் போதாது. தங்கள் மீதுள்ள அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறவேண்டும் என்று தீவிரவாதிகள் உறுதியாக இருக்க..அரசுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் கருணாநிதி, தலைமைச் செயலாளர் முத்துசாமி, உள்துறைச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர், சட்டத் துறைச் செயலாளர் பார்த்தசாரதி,டி.ஜி.பி. சர்மா ஆகியோர் ஏற்கனவே ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையை அடுத்து இந்த 5 தீவிரவாதிகள் மீதுள்ள பல்வேறு வழக்குகளையும் ரத்து செய்து பொதுநலன் கருதி இவர்களை விடுதலை செய்யலாம்என்று புதிய உத்தரவு பிறப்பிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, சட்டத்துறை ஆலோசனைகளுடன் கூடிய கோப்புகள் உள்துறைக்கு அனுப்பப்பட்டுவிட்டன.
அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் அரசு வக்கீல் அதை எடுத்துக்கொண்டு இந்த கைதிகள் மீதுள்ள வழக்குகள் எந்தெந்த நீதிமன்றத்தில்இருக்கிறதோ அங்கு சென்று தீவிரவாதிகளை விடுவிக்கலாம் என்று விசேஷ மனு தாக்கல் செய்வார்.
நீதிமன்றங்களின் அனுமதி கிடைத்தவுடன் தடா கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications