கோவை சிறையில் வெடிகுண்டு கண்டறியும் கருவி
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை சிறையில் வெடிகுண்டைக் கண்டறியும் கருவி நி றுவப்பட்டுள்ளது.
இது பற்றி சிறைத் துறை டி.ஐ.ஜி. எஸ்ரா நிருபர்களிடம் கூறியதாவது:
கோவை மத்திய சிறையில் கோவை தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாகக் கைதான கைதிகள் உள்பட 2ஆயிரம் பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், சிறைக்குள் எவ்வித அசம்பாவிதம் நேராத வகையிலும் ரூ. 10லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கருவி மற்றும் வெடிகுண்டுகளை கண்டறியும் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.
கோவை குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணை தொடங்கியுள்ள நிலையில், கோவை சிறையின்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இது தவிர, சிறையில் அடிக்கடி சோதனைகள் நடத்தப்படுகின்றன. இதனால் கைதிகளுக்கு ஆயுதங்களோ,போதைப் பொருள்களோ கடத்தப்படுவது முற்றிலும் தடுக்கப்படுகிறது என்றார் எஸ்ரா.












Click it and Unblock the Notifications