தமிழகத்தில் பசு பாதுகாப்பு மையங்கள் - காஞ்சி சங்கராச்சாரியார்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
பசுவதையைத் தடுக்கும் விதத்தில் தமிழகத்தில் பல இடங்களில் பசு பாதுகாப்பு மையம்(கோசாலை) அமைக்கப்படவுள்ளதாக காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திரசரஸ்வதி ஸ்வாமிகள் கூறினார்.
இதுதொடர்பாக நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
நாம் தாய், கோமாதா, பூமாதா, ஜகன்மாதா என்ற நால்வரையும் மதித்து பூஜை செய்துவருகிறோம். குறிப்பாக பிராணிகளில் பசுவை மட்டும்தான் நாம் தாய் எனஅழைக்கிறோம்.
தமிழ்நாட்டில் பல இடங்களில் பசுவதையைத் தடுப்பு மையங்கள்அமைக்கப்படவுள்ளன.
கோகுலாஷ்டமி நாளான செவ்வாய்க்கிழமையன்று இம் மையங்களைஅமைப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மையங்களின் பராமரிப்புக்கு ஏராளமான பொருட் செலவு ஏற்படும். எனவேபொதுமக்கள், பக்தர்கள் அனைவரும் தாராளமாக பொருளுதவி செய்ய வேண்டும்என்றார் அவர்.












Click it and Unblock the Notifications