கொலை வழக்கு: கிருஷ்ணசாமி முன்ஜாமீன் மனு தாக்கல்
சென்னை:
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கலவரத்தின் போது தோட்டசூபர்வைசர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கேட்டு புதிய தமிழகம்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் 1998-ம் ஆண்டுஅக்டோபர் 1-ம் தேதி கலவரம் ஏற்பட்டது. அப்போது அங்கு சூபர்வைசராக வேலைபார்த்த வந்த அந்தோணி முத்து என்பவர் கொல்லப்பட்டார்.
புதிய தமிழகம் கட்தித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் தூண்டுதலால்தான்அந்தோணி முத்து கொலை செய்யப்பட்டார் கூறப்பட்டது. இதையடுத்து கிருஷ்ணசாமிஉட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ் வழக்கு விசாரணைக்காக இவர்கள் 11 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.இதையடுத்து 11 பேரையும் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள 11 பேரும் தலைமறைவாக இருப்பதால் கைது செய்யமுடியவில்லை என்று போலீசார் கூறிவந்தனர். இதற்கிடையே சென்னைஉயர்நீதிமன்றத்தில் அந்தோணி முத்துவின் மனைவி மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டுள்ள 11 பேரையும் கைதுசெய்து ஆகஸ்ட் 22-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்தது.
அந்தக் கெடு செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைய உள்ள நிலையில், முன் ஜாமீன்கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி திங்கள்கிழமை மனுத் தாக்கல்செய்தார்.
இவ் வழக்கிலிருந்து விடுதலை செய்யக் கோரி டாக்டர் கிருஷ்ணசாமி தாக்கல் செய்தமனு இன்னும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications