கைதிகளுக்கு கல்வியளிக்க வருகிறது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம்
கோவை:
கோவை மத்திய சிறைக் கைதிகளுக்கு தொலைதூரக் கல்வி கற்பிக்க மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம்முன்வந்துள்ளது.
நெல்லையில் உள்ள இப் பல்லைக்கழகத்தின் சார்பாக தொடங்கப்பட்டுள்ள இந்த பட்டபடிப்பில் சேர கைதிகள்விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கைதிகளில் 68 பேர், இந்த தொலைதூரக் கல்வியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில் 32 பேர் முதுநிலைவரலாறு பட்டப் படிப்பிலும், 7 பேர் முதுநிலை தமிழ் பட்டப் படிப்பிலும், 15 பேர் இளநிலை வரலாறு பட்டப்படிப்பிலும், 14 பேர் தமிழ் இளநிலைப் பட்டப் படிப்பிலும் சேரத் தகுதி பெற்றுள்ளனர்.
இந்த தொலைதூரக் கல்விக்கான துவக்க விழா கோவை மத்திய சிறையில் நடந்தது. விழாவில் சிறைத் துறைடி.ஐ.ஜி. எஸ்றா பேசுகையில், இந்த கல்வி வாய்ப்பை கைதிகள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கல்விகற்பதன் மூலம் சிறையிலிருந்து விடுதலையாகிச் செல்லும்போது பயனுள்ளதாக அமையும். மறுவாழ்வுக்கும்உதவும் என்றார்.
இத்தகைய தொலைதூரக் கல்வியை ஏற்கனவே இந்திரா காந்தி திறந்த வெளிப் பல்கலைக் கழகம் மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மத்திய சிறையில் உள்ள சிறைக் கைதிகளுக்கு அப் பல்லைக் கழகத்தின் சார்பில் "வாழும் கலை பயிற்சித்திட்டத்தின் கீழ் டிப்ளமோ படிப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பல்கலைக் கழகத்தின் கல்வி மையம் ஒன்றும்கோவை மத்திய சிறையில் செயல்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications