காமராஜருக்கு கோயில் கட்டி கும்பிட வேண்டும்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

காமராஜருக்கு கோவில் கட்டி கும்பிட வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் கூறினார்.

மதுரையில் நடந்த காமராஜர் பிறந்த தினவிழாவில் அவர் பேசியதாவது:

காமராஜர் முதல் அமைச்சர் ஆனபிறகு முதல்முதலாக மதுரைக்கு வந்தார். கட்சிக்கு அப்பாற்பட்டு எனது தந்தை வரவேற்புக்குழு தலைவராகஇருந்து அவரை வரவேற்றார். இதனால் எனக்கும் காமராஜரைத் தெரியும்.

அவர் காலத்தில் வாழ்ந்தேன் என்ற பெருமை எனக்கு உண்டு. அரசியலில் நேர்மையாக வாழ்ந்த காமராஜருக்கு கோவில் கட்டி கும்பிட வேண்டும்.வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் வாழ்ந்து அரசியல் துறையில் பீஷ்மரைப் போன்று விளங்கியவர் அவர். அவரது ஒழுக்கத்தைப்பற்றி பரமஎதிரி கூட குறை சொல்ல முடியாது .

தனது தாய்க்கு 100 ரூபாய் அனுப்புவார். எனவே ஒரு சமுதாயத்துக்கோ, ஒரு கட்சிக்கோ அவர் சொந்தக்காரர் அல்ல. தமிழ்நாடு, இந்தியாஅனைத்துக்கும் சொந்தக்காரர். அவரது புகழைப் பரப்புவது நமக்கு பெருமை. போட்டி மனப்பான்மையில் இறங்கக் கூடாது என்றார் பழனிவேல்ராஜன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+