காஷ்மீர்: கண்ணி வெடியில் சிக்கி 2 ராணுவ உயர் அதிகாரிகள் பலி

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் கண்ணி வெடியில் சிக்கி இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் இருவர் உள்பட3 பேர் பலியானார்கள். திங்கள்கிழமை பிற்பகல் இச் சம்பவம் நடந்தது.

இந்திய ராணுவத்தைச் சேர்ந்த பிரிகேடியர் பி.எஸ். ஷெர்கில், கலோனல் ஆர்.எஸ்.சவுகான் ஆகியோர் ராணுவ வீரர்களுடன் ஜீப்பில் கிராமப் பகுதி வழியே சென்றுகொண்டிருந்தனர்.

தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரஃபியாபாத் அருகேஜாசில்தாரா என்ற இடத்தில் கண்ணி வெடியில் சிக்கி ஜீப் விபத்துக்குள்ளானது.

இந்த திடீர் விபத்தில் ஜீப் சுக்கு நூறாக சிதறியது. அதில் இருந்த ஷெர்கில், சவுகான், ஒருராணுவ வீரர் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தனர்.15-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

கண்ணி வெடியில் சிக்கிய ஜீப்பின் பாகங்கள் 100 மீட்டர் தொலைவுக்கு அப்பால்விழுந்தன. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பாதுகாப்புப்படையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுபோன்ற சம்பவத்தில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பலியானதுகடந்த 6 ஆண்டுகளில் இதுதான் முதல் சம்பவமாகும்.

சம்பவம் நடந்த கிராமச் சாலையை ராணுவத்தினர்தான் அதிக அளவில் பயன்படுத்திவந்தனர். அப்படியிருக்கும்போது அச் சாலையில் கண்ணி வெடியை வைத்தது யார்என்று கண்டுபிடிக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+