வரிமான வரித் துறையினரின் கிடுக்கிப்பிடியில் லல்லு

Subscribe to Oneindia Tamil

பாட்னா:

பிகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவிடம் ரூ. 1 கோடி வரி பாக்கி கேட்டு வருமான வரித்துறை புதிய நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. நோட்டீஸ்கிடைத்த 30 நாட்களுக்குள் வரி பாக்கியைக் கட்டி விட வேண்டும் என்றும் கெடு விதித்துள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக ரூ.46 லட்சம் சொத்து சேர்த்தது தொடர்பாக பிகார் முன்னாள் முதல்வர் லல்லு மீதும், ஊழலுக்குத் துணை புரிந்ததாக அவரதுமனைவியும், தற்போதைய பிகார் முதல்வருமான ராப்ரி தேவி மீதும் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். வழக்கு விசாரணைக்குப்பின் ராப்ரிதேவி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.சிறை சென்ற லல்லுவும் இப்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.

இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் லல்லுவுக்குச் சொந்தமான பல சொத்துக்கள், தேசிய சிறு சேமிப்புப் பத்திரங்கள், 14 வங்கிக் கணக்குப்புத்தகங்கள் ஆகியவற்றை முடக்கினர்.

இந்நிலையில் லல்லுவுக்கு எதிராக வருமான வரித்துறை அதிகாரிகள், ஒரு கோடி ரூபாய் வரிபாக்கி மற்றும் அதற்கான வட்டித்தொகைஆகியவற்றைக் கேட்டு புது நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

கடந்த 1990-96 ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமது சொத்துக்களுக்கு வருமான வரியைக் கட்டாமல் வரித்துறையை லல்லு பிரசாத்யாதவ் ஏமாற்றியுள்ளார்.

ரூ. 40 லட்சம் வட்டியுடன் சேர்த்து ரூ. 1 கோடியே 9 லட்சம் வரி பாக்கியை வருமான வரித்துறைக்கு லல்லு செலுத்த வேண்டியுள்ளது.

இந்த பாக்கியை வசூலிக்கவே லல்லுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸ் கிடைத்த 30 நாட்களுக்குள் வரி பாக்கியை லல்லு கட்ட வேண்டும்.

தவறினால் சொத்துக்கள் முடக்கப்படும். மேலும் முன்னாள் முதல்வர் என்பதற்காக வழங்கப்படும் ஓய்வு ஊதியத் தொகை நிறுத்தி வைக்கப்படும்என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+