முன்னாள் அமைச்சருக்கு சீதனமாக வந்த 100 சவரன் நகை
சென்னை:
முன்னாள் அமைச்சர் பரமசிவத்துக்குத் திருமணத்தின்போது 100 சவரன் நகைசீதனமாக கொடுத்ததாக அவரது மாமனார் சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.
அதிமுக ஆட்சியின்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த பரமசிவம்,வருமானத்துக்கு அதிகமாக ரூ. 39 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக 3-வது சிறப்புநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ் வழக்கு நீதிபதி அன்பழகன் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.திங்கள்கிழமை நடந்த விசாரணையின்போது பரமசிவத்தின் மாமனார் வீரண்ணன்சாட்சியம் அளித்தார். அதன் விவரம்:
முன்னாள் அமைச்சர் பரமசிவத்துக்கு எனது மகள் நல்லம்மாளைத் திருமணம் செய்துகொடுத்தேன். திருமணத்துக்குச் சீதனமாக 100 சவரன் நகை, 1.18 ஏக்கர் நஞ்சை நிலம்1.35 ஏக்கர் புஞ்சை நிலம் ஆகியவற்றைக் கொடுத்தேன்.
நான் கொடுத்த நிலங்களில் 50 தென் மரங்களும், 15 மாமரங்களும் இருந்தன.திருமணத்துக்கு வந்த ரூ.10 ஆயிரம் மொய் பணத்தையும் பரமசிவத்திடமேகொடுத்துவிட்டேன்.
நிலங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ. 6லட்சம் வருமானம் வரும். பரமசிவம் அமைச்சர்பதவி வகித்தபோது நிலங்களை எனது மகள்கள் கவனித்துக் கொண்டனர்.
பரமசிவத்தின் மகன் ராஜ்குமார் காதுகுத்து விழாவின்போது 3 சவரன் தங்கச் சங்கிலிஅணிவித்தேன். பணமாக ரூ. 5001 கொடுத்தேன். பரமசிவத்தின் இரு மகன்கள், ஒருமகள் ஆகியோரது படிப்புச் செலவுகளை நானே கவனித்துக் கொண்டேன் என்றார்வீரண்ணன்.
இந்த வழக்கில் இன்னும் ஒரே ஒரு சாட்சியிடம் விசாரணை நடத்தவேண்டியுள்ளது.இந்த விசாரணை முடிந்தவுடன் அடுத்த மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications