தர்மபுரியில் நக்ஸலைட்டுகள் மீண்டும் அட்டகாசம்
பொன்னகரம்:
தர்மபுரி மாவட்டத்தில் நக்ஸலைட் தீவிரவாதிள் தாக்குதலும், அட்டகாசமும் மீண்டும்அதிகரித்துள்ளது. சமீபத்தில் வாலிபர் ஒருவரை நக்ஸலைட்டுகள் கடத்திச்சென்றுள்ளனர்.
கர்நாடக, ஆந்திர எல்லையில் நக்ஸலைட் தீவிரவாதிகள் அட்டகாசங்கள் மீண்டும்அதிகரித்துள்ளது.
நக்சலைட்டுகள் தலைவன் ரவீந்திரன் சில மாதங்களுக்கு முன் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பிறகு நக்ஸலைட்டுகளின் தாக்குதல் குறைந்திருந்தது.இப்போது அவர்கள் தங்களது நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.
பென்னகரம் கோடி அள்ளி ஊராட்சியில் பூதிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாதையன்என்பரை நக்ஸலைட்டுகள் கடத்திச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக மாதையனின் தம்பி கிருஷ்ணன், ஒகேனக்கல் போலீஸ் நிலையத்தில்புகார் செய்துள்ளார்.
பூதிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (35) என்பவர் நக்ஸலைட் இயக்கத்தைச்சேர்நதவர். இவருக்கும் மாதையனுக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த முன் விரோதம் காரணமாக மாதையன் கடத்தப்பட்டிருக்கலாம் என்றுசந்தேகிக்கப்படுகிறது. ஒகேனக்கல் போலீஸார் தீவிர விசாரணைமேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications