தடா கைதிகள் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு
சென்னை:
51 கைதிகள் மீதான தடா வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று கோரி, வீரப்பனால் மகனை இழந்த முன்னாள்போலீஸ் அதிகாரி அப்துல் கரீம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே நிருபர்களிடம் கூறியதாவது:
பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்றுள்ளான். அவர்களைவிடுவிக்கவேண்டும் என்றால் கர்நாடகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 12 பெண்கள் உள்பட 51 தடாகைதிகளையும் விடுவிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளான்.
பொது நலன் கருதி 51 தடா கைதிகளையும் விடுவிக்க கர்நாடக அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து மைசூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 26 கைதிகள் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.மீதியுள்ளவர்கள் இன்னும் இரண்டொரு நாளில் மனு தாக்கல் செய்வார்கள்.
இதுதொடர்பான வழக்கை 24 ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார். தடா கோர்ட்டில் அரசு எந்தவித எதிர்ப்பும்தெரிவிக்காமல் இருந்தது போல் செஷன்ஸ் நீதிமன்றத்திலும் ஜாமீன் மனு மீது எந்தவித எதிர்ப்பும் அரசு சார்பில்தெரிவிக்க மாட்டோம்.
24 ம் தேதி கைதிகள் ஜாமீன் பிரச்சினையில் நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறேன். சந்தனக் கடத்தல்வீரப்பனால் கடத்தப்பட்ட ராஜ்குமாரும் மற்ற மூன்று பேரும் விரைவில் விடுதலையாவார்கள் என்று நம்புகிறேன்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வீரப்பனால் கொலை செய்யப்பட்ட கர்நாடக போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் தந்தைஅப்துல் கரீம் 51 தடா கைதிகள் மீதான வழக்கை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில்மனுத்தாக்கல் செய்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக மேல்நடவடிக்கை எடுக்குமாறு அரசு வழக்கறிஞர்களுக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளதுஎன்றார் மல்லிகார்ஜுன கார்கே.












Click it and Unblock the Notifications