சென்னை சிறைக் கலவரம்: முதல்வரிடம் அறிக்கை சமர்பிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மத்திய சிறையில் நடந்த கலவரம் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி டேவிட் கிறிஸ்டியன் தலைமையிலான விசாரணைக் குழு, தனது விசாரணைஅறிக்கையை முதல்வர் கருணாநிதியிடம் திங்கள்கிழமை சமர்பித்தது.

பல்வேறு குற்றங்கள் தொடர்பாக சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் பாஸ்கர் வடிவேலு. இவர் கடந்த நவம்பர் மாதம் 17-ம் தேதிஉடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததார்.

ஆனால் அவர் அடித்துக் கொல்லப்பட்டதாக உடனிருந்த கைதிகளிடையே செய்தி பரவியதை அடுத்து சிறையில் கலவரம் ஏற்பட்டது. இக் கலவரத்தில் சிறைதுணை ஜெயிலர் ஜெயகுமார் எரித்துக் கொல்லப்பட்டார்.

கலவரத்தை அடக்க போலீஸார் துப்பாக்கிச் சூடும், தடியடியும் நடத்தினர். இதில் 15 க்கும் மேற்பட்ட கைதிகள் இறந்தனர். பலர் காயமடைந்தனர்.

இதையடுத்து, இச்சம்பவம் நீதிவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நீதிபதி டேவிட் கிறிஸ்டியன் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இந்தவிசாரணைக்குழு தனது அறிக்கையை திங்கள்கிழமை முதல்வர் கருணாநிதியிடம் சமர்பித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+