தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த பலர் ஆயுதங்களுடன் கைது
கடலூர்:
தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடமிருந்து ஏராளனமான ஆயுதங்களும், வெடி பொருட்களும் பறிமுதல்செய்யப்பட்டன என்று கடலூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் டேவிட்சன்தெரிவித்தார்.
கடலூரில் நிருபர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கடலூர் மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டுவருகின்றனர். கடந்த சில வாரங்களாக நடத்தப்பட்ட இந்த தீவிர சோதனையில்தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருட்களும் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.
சிவகங்கை அருகே கடலூர் போலீஸாரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு விடுதலைப்படையைச் சேர்ந்த தீவிரவாதியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.
குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் 1993-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்புக்கும்அந்த தீவிரவாதிக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தவிர ஆண்டிமடம், மயிலாடுதுறை போன்ற இடங்களில் நடந்த திருட்டுகளிலும்இவருக்குத் தொடர்பு உள்ளது.
சிவகங்கையில் கைதான நபரின் நண்பர் வீடு நெய்வேலியில் உள்ளது. அந்தவீட்டிலிருந்து வயர்லெஸ் கருவி, இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், வெடி பொருட்கள்,ரூ. 1.5 லட்சம் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார் டேவிட்சன்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications