உலக வங்கியிடம் இந்தியா அடிபணியாது என்கிறார் சின்ஹா
ஜம்ஷெட்பூர்:
உலக் வங்கியின் பிடியில் இந்தியா சிக்காது. அதற்கான முயற்சிகளை மத்திய அரசுமேற்கொண்டுள்ளது என்று மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.
ஜெம்ஷெட்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
சுதேசிக் கொள்கையில் பாரதீய ஜனதா தீவிர நாட்டம் கொண்டுள்ளது. பாஜக பின்பற்றிவரும் சுதேசிக் கொள்கையும், தன்னிறைவுக் கொள்கையும் சரியான பாதையில்ஒன்றிணைந்து செயல்பட்டால் எதிர்காலத்தில் இந்தியா ஒரு வல்லரசு நாடாகஉருவெடுக்கும்.
இந்தியா முன்னேற்றம் கண்டுவிட்டால் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் உலகவங்கியோ, சர்வதேச நிதியமோ தலையிடாது. அவற்றில் பிடியில் இந்தியாவும்சிக்காது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதுதாற்காலிகமான ஒன்றுதான். விரைவில் இந்திய ரூபாயின் மதிப்பு உயரும். இதுபோன்ற பல தடைகளையும் மீறி இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி பெற்று வருவதுகுறிப்பிடத்தக்கது.
நம் நாட்டின் நலனுக்கும், கெளரவத்துக்கும் பாதிப்பு ஏற்படுமானால் உலகவர்த்தகத்துடனான கட்டுப்பாடுகளில் இருந்து இந்தியா துண்டித்துக் கொள்ளும்.
1998-ம் ஆண்டு பாரதீய ஜனதா அரசு பதவியேற்றபோது இந்தியா கடுமையானபொருளாதாரப் பிரச்சினையில் இருந்தது. ஆனால், பாஜக அரசு மேற்கொண்டபல்வேறு திட்டங்களால் அன்னியச் செலாவணி இருப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் கிராமப் பகுதிகளில்வசிக்கின்றனர். கிராமப்பகுதி பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ்சுதேசிக் கொள்கையின் அடிப்படையில் சிறுதொழில் மற்றும் குடிசைத் தொழில்களுக்குஅதிக ஊக்கம் அளிக்கப்படும் என்றார் சின்ஹா.












Click it and Unblock the Notifications