அமெரிக்காவில் யாகம் நடத்துகிறார் பங்காரு அடிகளார்
சென்னை:
உலக அமைதிக்காக செப்டம்பர் மாதம் 3 ம் தேதி பங்காரு அடிகளார் அமெரிக்காவில் மகாயாகம் நடத்துகிறார்.
அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா நகரில் ஆதிபராசக்தி பீடம் மற்றும் ஆன்மீக மையம் அமைக்கப்பட உள்ளது.மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் சார்பில் இந்த ஆன்மீக மையம் அமைக்கப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா செப்டம்பர் மாதம் 3 ம் தேதி நடக்கிறது. விழாவிற்கு மேல்மருவத்தூர்ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆன்மீக குரு பங்காரு அடிகளார் முன்னிலை வகிக்கிறார். பாராளுமன்ற சபாநாயகர்பாலயோகி விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
முன்னதாக, அடிக்கல்நாட்டு விழா அன்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரை உலக அமைதி வேண்டி மகாயாகம் நடத்தப்படுகிறது. யாகத்தைப் பங்காரு அடிகளார் தொடங்கி வைக்கிறார். மாலையில் நடைபெறும் ஆன்மீகமாநாட்டிலும் பங்காரு அடிகள் கலந்து கொள்கிறார்.
மாநாட்டில் ஆன்மீகத்தில் பெண்கள், ஆன்மீக குரு, தியாகம், ஆன்மீகத்தில் சமுதாயப் பணி ஆகிய தலைப்புக்களில்விவாதம் நடக்கும்.
அமெரிக்காவில் உள்ள ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற செவ்வாடை தொண்டர்கள், அமெரிக்காவில் பங்காருஅடிகளாருக்கு வரவேற்பு அளிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications