போதைப் பொருள் கடத்திய இந்தியருக்கு சவூதியில் தூக்கு
துபாய்:
சவூதி அரேபியாவுக்குள் போதைப் பொருள் கடத்தி வந்ததாகக் கைது செய்யப்பட்ட இந்தியர் ஒருவர் புதன்கிழமை தூக்கிலிடப்பட்டார்.
சவூதி அரேபிய உள்துறை அமைச்சக செய்திக் குறிப்பில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெயர், விலாசம் எதுவும் குறிப்பிடாமல் சவூதி அரேபியாவுக்குள் ஹெராயின் போதைப் பொருளைக் கடத்தி வந்ததற்காக அந்த நபர் கைதுசெய்யப்பட்டதாகவும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதாகவும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவுக்குள் போதைப் பொருள் கடத்தி வருபவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படும்.
போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க எந்த நடவடிக்கையையும் சவூதி அரேபிய அரசு மேற்கொள்ளும் என்று சவூதி அரேபிய உள்துறை அமைச்சகம்தெரிவித்துள்ளது.
போதைப் பொருள் கடத்தல், கற்பழிப்பு, கொலை, கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு சவூதி அரேபியாவில் தூக்குத் தண்டனைவிதிக்கப்படுகிறது.
இந்த ஆண்டில் இதுவரை மேற்கண்ட குற்றங்களில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 89 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications