சந்திரிகா அமைச்சரவையிலிருந்து 3 அமைச்சர்கள் ராஜினாமா
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா அரசிலிருந்து 3 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
கடந்த 18 ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அக்டோபர் 10 ம் தேதி பொதுத்தேர்தல் நடக்கும் என்று சந்திரிகா அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், சந்திரிகா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் அஷ்ரப், ஹிஸ்புல்லா, முகைதீன்ஆகிய 3 அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை திடீரென்று ராஜினாமா செய்தனர்.
இதுகுறித்து அஷ்ரபின் செயலாளர் யாசீம் கூறுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளைக் கேட்டதற்காக சந்திரிகா கட்சியிலுள்ள மூத்தஅமைச்சர் ஒருவர் அஷ்ரபைக் கடுமையாக விமர்சித்தார். இதனால்தான் 3 அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications