அரசு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய ஜெ. மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 136 அரசு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யஅனுமதிக்க வேண்டும் என்று தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதாவும், சசிகலாவும் தனித்தனியே மனுக்கள் தாக்கல்செய்தனர்.

வருமானத்திற்கு அதிகமாக ரூ.66.5 கோடி அளவில் சொத்து சேர்த்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா,சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு, சென்னை முதலாவது தனி நீதிமன்றத்தில்விசாரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வழக்கில் ஏற்கனவே அரசு தரப்பில் 253 பேர் சாட்சியளித்துள்ளனர். இன்னும் 5 பேர் மட்டுமே சாட்சியளிக்கவேண்டிய நிலையில் புதன் கிழமை அன்று நடந்த விசாரணையின்போது, ஜெயலலிதா, சசிகலா சார்பில் இரண்டுமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இது மிகப்பெரிய வழக்கு. அதே சமயத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் எங்கள் மீது போடப்பட்ட வழக்கு.எனவே மூத்த அனுபவம் வாய்ந்த, இந்த வழக்கிலேயே முழு கவனத்தையும் செலுத்தி வாதாடும் வக்கீலைநியமிக்க வேண்டிய நிலையில் நாங்கள் உள்ளோம்.

வக்கீல் விருத்தாச்சல ரெட்டியாருக்கு பிறகு அப்படிப்பட்ட வக்கீல் கிடைக்கவில்லை. தகுதிவாய்ந்த வக்கீல்கள்பலருக்கு ஏற்கனவே பல வழக்குகள் கைவசம் இருந்ததால் இதில் ஆஜராக விரும்பவில்லை. ஒரு சில மூத்தவக்கீல்கள் அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக வர மறுத்து விட்டனர்.

எனக்காக தற்போது டான்சி வழக்கில் ஆஜராகி வரும் மூத்த வக்கீல் ஜோதிக்கு வேறு பல வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் இருப்பதால் இந்த வழக்கில் கவனம் செலுத்த முடியவில்லை. 10.2.2000க்கு பிறகு சாட்சியளித்தஅரசு சாட்சிகளிடம் எங்கள் சார்பில் குறுக்கு விசாரணை செய்யப்படாததற்கு இதுவே உண்மை காரணம். இது அரசுதரப்பினருக்கும் தெரியும்.

இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டால் எங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும். எனவே நீதியின் நலன்கருதி 136 அரசு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மனுக்களில்ஜெயலலிதாவும், சசிகலாவும் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+