மீண்டும் போர்நிறுத்தம் செய்வோம் ...காஷ்மீர் தீவிரவாதிகள்
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ள ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகள் மீண்டும் ஒரு போர்நிறத்தத்துக்குத் தயாராக உள்ளனர்.
இத் தகவலை, அந்த இயக்கத்தின் தலைமை கமாண்டர் அப்துல் மஜீத் தார் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல ஆண்டுகளாக தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகள் திடீரென்று கடந்த மாதம் போர்நிறுத்தம் அறிவித்தனர்.
பொது வாழ்க்கைக்குத் திரும்ப விரும்புவதாகவும், அதற்காக இந்திய அரசுடன் பேச்சு நடத்துவதற்காக 2 மாதம் போர் நிறுத்தம் செய்துள்ளதாகவும்அவர்கள் அறிவித்தனர்.
தீவிரவாதிகளின் இந்த அறிவிப்பை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டு அவர்களுடன் பேச்சு நடத்த விரும்புவதாக பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார்.ஆனால், போர் நிறுத்தம் அறிவித்த சில நாட்களில் போர்நிறுத்தத்தை வாபஸ் பெற்றுக்கொண்டதாக அந்த அமைப்பின் சுப்ரீம் கமாண்டர் சயத் சலாஹுதீன்அறிவித்தார்.
அதன் பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில் மீண்டும் போர்நிறுத்தம் அறிவிக்கப்போவதாக ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தலைமை கமாண்டர் அப்துல் மஜீத் தார் தெரிவித்துள்ளார்.
இத தொடர்பாக உள்ளூர் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டி:
இந்திய அரசுடன் பேச்சு நடத்துவதற்கான முயற்சியில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு ஈடுபட்டுள்ளது. சர்வதேச அளவில் அதற்கான நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பேச்சுவார்த்தைக்கு வழி ஏற்படுத்தும் வகையில் இரண்டு மாத போர்நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு அடுத்த சில தினங்களில் வெளியிடப்படும். அதன்பிறகுஇந்திய அரசுடன் பேச்சு நடத்தப்படும்.
இந்தியா-பாகிஸ்தான்-ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு ஆகியவற்றுக்கிடையே நடைபெறும் முத்தரப்பு பேச்சுவார்த்தையின் மூலம் தான் காஷ்மீர் பிரச்சினைக்குத்தீர்வு காணமுடியும்.
இப் பேச்சுவார்த்தையில் காணப்படும் முடிவு இந்தியாவுக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ எதிராக இருந்தாலும் அதை ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு நிச்சயம்ஏற்றுக் கொள்ளும்.
காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை ஒன்றுதான் தீர்வு. காஷ்மீரில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு சண்டை நீடித்தால் பாகிஸ்தானும், இந்தியாவும் நிச்சயம்பேச்சுவார்த்தைக்கு உடன்படும்.
காஷ்மீர் பிரச்சினை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் அரசியல் கட்சிகளின் ஆதரவு தேவை. குறிப்பாக அனைத்துக் கட்சி ஹுரியத் மாநாட்டின்ஆதரவு அவசியம்.
ஆனால், ஹிஸ்புல் முஜாஹிதீன் அறிவித்துள்ள போர்நிறுத்தம் குறித்து அது எந்த கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளது.
ஹுரியத் மாநாட்டுக் கட்சியுடன் பேச நாங்கள் தயாராக உள்ளோம். ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்புக்கும் ஹுரியத் மாநாட்டுக் கட்சிக்கும் இடையே ஒருங்கிணைப்புகமிட்டி விரைவில் ஏற்படுத்தப்படும் என்றார் தர்.












Click it and Unblock the Notifications