வன்முறையில் இறங்கிய திருச்சி பா.ஜ.க தொண்டர்கள்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
மத்திய மின்துறை அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் மரணமடைந்ததையடுத்து திருச்சியில் பாரதீய ஜனதாக் கட்சித் தொண்டர்கள் கல்வீச்சு, கடைகளைமூட வைப்பது போன்ற வன்முறைச் செயல்களில் இறங்கினர்.
திருச்சி சென்ட்ரல் பஸ் நிலையம் மற்றும் தில்லை நகரில் பஸ்கள் மீது கல்வீசித் தாக்கினார்கள். இச்சம்பவத்தில் இரண்டு பஸ்களின் ஜன்னல்கள் உடைந்துநொறுங்கின.
பா.ஜ.க. தொண்டர்களின் வற்புறுத்தலால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதனால், சாலைகள் வெறிச்சோடிக்கிடந்தது.
இதற்கிடையே, அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்படுவதாக மாவட்டக் கலெக்டர் வி.மூர்த்தி அறிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications