களம் இறங்கிய பழைய ஜோடிக்கு முதல் வெற்றி

Subscribe to Oneindia Tamil

கம்மாக்:

ஹாம்லட் கோப்பைக்கான ஏடிபி டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - மகேஷ் பூபதி ஜோடி வெற்றி பெற்றது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்த இவர்கள், தாங்கள் விளையாடிய முதல் ஆட்டத்திலேயே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றி அவர்களது ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

கடந்த ஆண்டு நடந்த 4 கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இருவரும் விளையாடினர்.

இதில் பிரெஞ்ச் மற்றும் விம்பிள்டன் பட்டங்களை அவர்கள் வென்று உலகின் முதல் நிலை இரட்டையர் ஜோடி என்ற பெருமையைப் பெற்றனர். ஆனால்,அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். இது அவர்களது ரசிகர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கேகவலையை அளித்தது.

இந் நிலையில், இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்து ஆடுவது என்று முடிவு செய்தனர். ஹாம்லட் கோப்பைக்கான முதல் சுற்று ஆட்டத்தில் அவர்கள் வெற்றிபெற்று தங்களது திறனை அவர்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

லியாண்டர் பயஸ் - மகேஷ் பூபதி இருவரும் அடுத்த மாதம் சிட்னியில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் டென்னிஸ் போட்டியில் இவர்கள் இருவரும் ஜோடிசேர்ந்து ஆட உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+