மதுரையில் ரவுடி சுட்டுக்கொலை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் போலீஸாரை வெடிகுண்டு வீசித் தாக்கிய ரவுடி பாலன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மதுரையை அடுத்த ஆண்டிப்பட்டி கிராமத்தில் போலீஸார் வாகனச் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே ஆட்டோ ரிக்ஷா ஒன்றில்ரவுடி பாலன் என்பவர் வந்து கொண்டிருந்தார்.
வாகனச் சோதனைக்காகப் போலீஸார் ஆட்டோவை நிறுத்தினர். அப்போது ஆட்டோவில் பயணம் செய்த ரவுடி பாலனும், அவரது கூட்டாளிகளும்போலீஸாரை நோக்கி வெடிகுண்டுகளை வீசித் தாக்கினர். சோதனையில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை வெட்டித் தாக்கினர். காயமடைந்த அவர்பாலன் கூட்டாளிகளை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார்.
இதில் ரவுடி பாலன் சம்பவ இடத்திலேயே பிணமானார். அவரது கூட்டாளிகள் தப்பியோடி விட்டனர்.
இச்சம்பவத்தில் போலீஸ் ஜீப் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications