வீரப்பனிடமிருந்து புது கோரிக்கை ஏதும் இல்லை - கிருஷ்ணா
பெங்களூர்:
கன்னட நடிகர் ராஜ்குமார் உள்ட 4 பேரைக் கடத்திச் சென்றுள்ளசந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து புது கோரிக்கை ஏதும்வரவில்லை என்று கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாதெரிவித்தார்.
பெங்களூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
வீரப்பனால் கடத்தப்பட்டுள்ள ராஜ்குமாரை மீட்பது குறித்துதமிழக முதல்வர் கருணாநிதியுடன் தொடர்பு கொண்டு அடிக்கடிபேசி வருகிறேன்.
வீரப்பனைச் சந்திக்க காட்டுக்குள் சென்றுள்ள அரசுத் தூதர்நக்கீரன் கோபாலிடமிருந்து புதன்கிழமை இரவு அல்லதுவியாழக்கிழமை காலை நல்ல பதில் கிடைக்கும் என்றுஎதிர்பார்ப்பதாக கருணாநிதி தெரிவித்தார்.
வீரப்பனிடமிருந்து புதிய கோரிக்கை ஏதும் வரவில்லை.ராஜ்குமார் கடத்தல் சம்பவம் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது.விரைவில் ராஜ்குமார் விடுவிக்கப்படுவார் என்று நம்புகிறேன்.
வீரப்பனின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து கர்நாடகஅரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
ராஜ்குமார் கடத்தல் சம்பவம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளநிலையில் பந்த், ஊர்வலம் போன்றவற்றை நடத்தி பிரச்சினைமேலும் சிக்கலாக்கவேண்டாம் என்று பல்வேறு அமைப்பினரைகேட்டுக் கொள்கிறேன் என்றார் கிருஷ்ணா.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications