வெங்காய விவசாயிகளை அழ வைக்கும்" விலை வீழ்ச்சி
கோவை:
வெங்காய விலை வீழ்ச்சியால் கோவை மாவட்ட விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். அரசு தேவையானநடவடிக்கைகளை உடனடியாக மேற் கொள்ளவில்லையென்றால், நீலகிரி தேயிலை விவசாயிகளின்போராட்டத்தை பின்பற்றுவோம் என உழவர் உழைப்பாளர் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெங்காய விலை ஏற்றத்தால் டெல்லியில் நடந்த தேர்தலில் ஆட்சி மாற்றமேஏற்பட்டது. தற்போது வெங்காய விலை வீழ்ச்சியால், தென் மாநிலங்களில் விவசாயிகள் கடும்பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் வெங்காயம் தென்காசி மற்றும் கோவை பகுதியில் அதிக அளவில்உற்பத்தியாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில் பல்லடம், உடுமலை, பொள்ளாச்சி மற்றும் குண்டடம் ஆகிய இடங்களில் வெங்காயம் இந்தஆண்டு அபரிமிதமாக விளைந்துள்ளது. இந்தப் பகுதியில் 10 லட்சம் டன் வெங்காயம் அறுவடைக்கு தயாராகஉள்ளது. சில இடங்களில் அறுவடையும் நடந்து வருகிறது.
இந்தப் பகுதியில் உள்ள மார்க்கெட்டுகளில் விற்பனை போக, வாரம் ஒன்றிற்கு 1,500 லோடு வெங்காயம் வெளிமாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. ஆனால் அங்கும் வெங்காய விளைச்சல் இருப்பதால், விலைவீழ்ச்சியடைந்துள்ளது.
தமிழகத்திலிருந்து வழக்கமாக இந்தியாவின் தென்மாநிலங்களுக்கு வெங்காயம் அனுப்பப்படும். கல்கத்தாவிற்கும்அனுப்பப்படும். ஆனால், மாகாராஷ்டிராவிலிருந்து இந்த ஆண்டு தென் மாநிலங்களுக்கு வெங்காயம் விற்பனைசெய்யப்படுவதால், தமிழக வெங்காயத்திற்கு கிராக்கி இல்லாமல் போய்விட்டது.
இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ. 3 வரை கொள்முதல் விலையில் இருந்த வெங்காயம் ரூ.1.50 பைசா முதல் ரூ.2 வரை குறைந்துள்ளது. விவசாயிகளுக்கு உற்பத்தி செலவாக ஏக்கர் ஒன்றிற்கு ரூ. 25 ஆயிரம்செலவாகிறது. ஆனால் கட்டுபடியாகாத விலையால் விவசாயிகள் கடுமையாகப் பதிப்படைந்துள்ளனர்.
தமிழகத்திலிருந்து 80 ஆயிரம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால்ஏற்றுமதியைப் பொறுத்தவரை எதுவும் நடைமுறைக்கு வரவில்லை. இது தொடர்பாக உழவர் உழைப்பாளர் கட்சித்தலைவர் செல்லத்துரை தலைமையில் ஒரு குழு டெல்லி சென்று பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்து வலியுறுத்தியது.
தற்போது இந்தக் கட்சி வெங்காய விலை வீழ்ச்சியை காரணம் காட்டி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.இக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ, பழனிச்சாமி, பொங்கலூர், பல்லடம், உடுமலைப் பகுதிகளில் விவசாயிகளைஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.
இதுதவிர, கோவைத் தொகுதி எம்.பி.,ராதாகிருஷ்ணன், வெங்காய ஏற்றுமதியை அனுமதிக்க கோரிபாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். வெங்காய அறுவடை முடிவதற்குள் விலை ஏற்றமோ, ஏற்றுமதிவாய்ப்போ கிடைக்காவிட்டால், பயன்பெறப் போவது விவசாயிகள் அல்ல. குறைந்த விலைக்கு வாங்கி, பதுக்கிவைத்திருக்கும் வியாபாரிகளும், இடைத் தரகர்களும் தான் என்பது விவசாயிகளின் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications