ரயில்வே தனியார்மயமாகுமா?
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ரயில்வே துறை தனியார் மயமாகாது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி நாடாளுமன்றத்தில்தெரிவித்தார்.
ரயில்வே துறைக்கான துணை மானியக் கோரிக்கை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இதுதொடர்பாக நடந்த விவாதத்திற்குப் பின் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி சுமார் 5 மணி நேரம் பதில்அளித்துப் பேசினார்.
அப்போது, ரயில்வே துறை மக்களின் நலனுக்காக மாற்றியமைக்கப்படும். இருப்பினும் ராகேஷ் மோகன்சீர்திருத்தக் கமிட்டியின் பரிந்துரைப்படியே இறுதி முடிவு எடுக்கப்படும்.
ரயில்வே துறையின் நிதி ஆதாரங்களைப் பெருக்குவதற்காக கூட்டு நிறுவனங்களின் பங்கேற்பைஅனுமதிக்கிறோம். ஆனால் ரயில்வே துறையை தனியார்மயமாக்க மாட்டோம் என்றார் மம்தா பானர்ஜி.












Click it and Unblock the Notifications