தாத்தா...தந்தை...மகன்: 3 தலைமுறை அமைச்சர்களாய் இருந்த குமாரமங்கலம் குடும்பம்

Subscribe to Oneindia Tamil

எஸ். சுப்பிரமணியம்

அரசியலில் மூன்று தலைமுறையாக ஈடுபட்டு வந்த "குமாரமங்கலம் குடும்பத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜன்.

சேலம் அருகில் உள்ள ஒரு ஊரின் பெயர் தான் குமாரமங்கலம். ஊரின் பெயரே இவர்களின் குடும்பப் பெயரானது. ரங்கராஜன் குடும்பத்தின் சொந்த ஊர்பெயர் தந்தைக்கு பிறகு தனயனின் பெயருடனும் ஒட்டிக் கொண்டது.

ரங்கராஜனின் தாத்தா டாக்டர் பி. சுப்பராயன். மத்தியில் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றவர். கவுண்டர் இனத்தைச் சேர்ந்த இவர் பெங்களூரைச்சேர்ந்த பிரமாணர் வகுப்பைச் சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இத்தம்பதிக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உண்டு. மகள் பார்வதி கிருஷ்ணன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகதிகழ்ந்தவர். இவர் ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.

மகன்களில் மோகன் குமாரமங்கலம் தனது அரசியல் வாழ்க்கையை இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்து ஆரம்பித்தார். நாடாளுமன்றஉறுப்பினராகவும் இருந்தார். பின்னர் காங்கிரசில் இணைந்தார். மத்தியில் காங்கிரஸ் அமைச்சரவையில் அமைச்சரானார்.

மோகன் குமாரமங்கலமும் காதல் திருமணம் செய்து கொண்டவர் தான். வங்காளப் பெண்மணி ஒருவரை மணந்தார். அவர்களுக்கு பிறந்தவர் தான்ரங்கராஜன் குமாரமங்கலம். முன்னோர்கள் வழியில் ரங்கராஜனும் சிந்தி இனத்தைச் சேர்ந்த பெண்ணை காதல் மணம் செய்து கொண்டார்.

தமிழில் சரளமாக பேசத் தெரியாத ரங்கராஜனின் வீட்டில் எல்லோரும் இந்தியில் தான் பேசுவது வழக்கம். மூன்று தலைமுறையாக அரசியல் குடும்பம்மட்டுமல்ல, மூன்று தலைமுறையாக வக்கீல் குடும்பமாகவும் திகழ்ந்தது ரங்கராஜன் குடும்பம்.

தாத்தா, தந்தையை அடுத்து ரங்கராஜனும் சட்டம் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+