அமைச்சர் விழாவில் பாம்பு புரளி
திருவோணம்:
அமைச்சர் கோ.சி.மணி கலந்து கொண்ட அரசு விழாவில் பாம்பு புகுந்ததாக வதந்தி கிளப்பப்பட்டதைத் தொடர்ந்து விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்த ஊரணிபுரத்தில் வெட்டுவாக்கோட்டை ஊராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டத் துவக்க விழா நடைபெற்றது.
விழாவில் அமைச்சர் கோ.சி.மணி கலந்து கொண்டார். விழா தொடங்கிய சிறிது நேரத்தில் கூட்டத்திலிருந்த ஒருவர் பாம்பு, பாம்பு என்றுக் கத்தத்துவங்கினார். இதையடுத்து விழாவுக்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினர்.
திருவோணம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் அனைவரையும் அமைதியாக அமரும்படிக் கூறினார். மேடையில் பேசிக் கொண்டிருந்த திருவோணம் யூனியன்துணைத்தலைவர் சேதுராமலிங்கம், விழாவை கெடுப்பதற்காக மாற்றுக் கட்சிக்காரர்கள் செய்த சதித் திட்டம் இது. யாரும் பயப்பட வேண்டாம்என்றார். அதற்குப் பின் பரபரப்பு அடங்கியது.












Click it and Unblock the Notifications