உள்ளூர் கட்டணத்தில் எஸ்.டி.டி பேசிய நால்வர் கைது
சென்னை:
உள்ளூர் கட்டணத்தில் வெளிநாட்டுக்கு தொலைபேசியில் பேசி மோசடி செய்த பெண் உள்பட நான்கு பேரை சி.பி.ஐ. கைது செய்தது. இதில் இருவர் வெளிநாட்டுகுடியுரிமை பெற்றவர்கள்.
சென்னையில் வி.எஸ்.என்.எல். மூலம் இன்டர்நெட் வசதியை பெற்று, உள்ளூர் தொலைபேசிக் கட்டணத்தில் வெளிநாட்டிற்கு இவர்கள் பேசி வந்துள்ளனர்.வழக்கமாக நம் நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு தொலைபேசியில் பேசினால், அதற்கான கட்டணத்தை வெளிநாட்டு தொலைபேசி நிறுவனம்,வி.எஸ்.என்.எல். மற்றும் இந்திய தொலைபேசித் துறை ஆகியவை பகிர்ந்து கொள்ளும்.
ஆனால், சிலர் ஐ.எஸ்.டி.என். வசதி உள்ள தொலைபேசி லைனில் பல அழைப்புகள் செய்யும் வகையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோசடி செய்வதாகசென்னை தொலைபேசித் துறைக்கும், வி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கும் தகவல் கிடைத்தது. இதுகுறித்து சி.பி.ஐ.க்கு புகார் தரப்பட்டது. அதன்பேரில்விசாரணை நடத்தும்படி சி.பி.ஐ. இணை இயக்குநர் முகர்ஜி உத்தரவிட்டார்.
சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த காதர் நவாஸ்கான் சாலையில் உள்ள ஒரு அலுவலகத்தில் இந்த மோசடிநடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பிரிட்டன் குடியுரிமை பெற்ற பாலகிருஷ்ணன், சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற வித்யாஸ்ரீ சுமதி, ஜேக்கப், ராஜேஷ்ஹோஜா ஆகிய நால்வரை சி.பி.ஐ. கைது செய்தது.
இம்மோசடி குறித்து சென்னை தொலைபேசித் துறை தலைமைப் பொது மேலாளர் சி.வி.ராஜன் கூறுகையில், தொழில்நுட்ப வளர்ச்சி நன்மைக்காக இருக்கவேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி இதுபோன்ற சில திருட்டுத்தனங்கள் செய்ய முடிகிறது. இப்படிப்பட்ட மோசடியில் ஈடுபடுபவர்களை பற்றியதகவல்கள் எங்களுக்கு எப்படியும் வந்து விடும் என்றார்.












Click it and Unblock the Notifications