இறந்த நீர்மூழ்கிக் கப்பல் வீரர்களுக்காக ரஷ்யாவில் இன்று துக்கம்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ:

கடலில் மூழ்கி இறந்த ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் ஊழியர்கள் 118 பேருக்கு ரஷ்யாமுழுவதும் புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்படுகிறது.

ரஷ்ய கடற்படையைச் சேர்ந்த குர்ஸ்க் என்ற நீர்மூழ்கிக் கப்பல் ஆகஸ்ட் 14-ம் தேதிஆர்க்டிக் கடலில் மூழ்கியது. அதற்குள் 118 பேர் இருந்தனர்.

அவர்களை உயிருடன் மீட்கும் பணியில் ரஷ்ய மீட்புப் படையினருடன், நார்வேமற்றும் பிரிட்டன் மீட்புக் குழுவினரும் ஈடுபட்டனர்.

திங்கள்கிழமை அதிகாலை கடலுக்குள் சென்ற நார்வே மீட்புக் குழுவினர், கப்பலின்வெளிப்புறம் மற்றும் உட்புறக் கதவைத் திறந்து உள்ளே சென்றனர்.

ஆனால், கப்பல் முழுவதும் தண்ணீர் நிரம்பியிருந்ததால், கப்பலுக்குள் இருந்த 118பேரும் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதையடுத்து தனது மீட்புப் பணியை நார்வே மற்றும் பிரிட்டன் மீட்புக் குழுவினர்நிறுத்துவிட்டு தங்கள் நாடுகளுக்குத் திரும்பிவிட்டனர்.

கப்பலுக்குள் சிக்கியுள்ள 118 பேரின் உடல்களை மீட்கும் பணியில் ரஷ்ய மீட்புப்படையினர் மேற்கொண்டனர். ஆனால், அது முடியாத காரியம் என்பதால் அதுவும்பாதியிலேயே கைவிடப்பட்டது.

இறந்துபோன 118 வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ரஷ்யா முழுவதும்புதன்கிழமை துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

குர்க்ஸ் கப்பல் ஊழியர்களுக்கு நேர்ந்த கொடுமை மிகவும் வருத்தம் அளிக்கிறது.அவர்களது உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும்தெரிவித்துக் கொள்வதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.

6-வது நீர்மூழ்கிக் கப்பல்:

கடலில் மூழ்கிய 6-வது நீர்மூழ்கிக் கப்பல் குர்ஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது. 1950-ம்ஆண்டுகளில் நடந்த போர்களில்தான் முதன்முதலாக நீர்மூழ்கிக் கப்பல்கள்பயன்படுத்தப்பட்டன.

அதன்பிறகு பல்வேறு காலகட்டங்களில் நீர்மூழ்கிக் கப்பல்கள் கடலில் மூழ்கியுள்ளன.அந்த வகையில் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் 6-வதாகும்.

இதுவரை 2 அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களும், 4 ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்களும்கடலில் மூழ்கியுள்ளன. கடலில் மூழ்கிய நீர்மூழ்கிக் கப்பல்களை மீட்காமல் அப்படியேவிட்டுவிடுவதுதான் வழக்கம்.

ஆனால், கடைசியாக கடலில் மூழ்கிய குர்ஸ்க் கப்பல், ரஷ்ய துறைமுகத்துக்கு அருகில்மூழ்கியுள்ளது. அதனால், அக் கப்பலை மீட்கலாம் என்று கடற்படை அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

கப்பலை மீட்க ரூ. 450 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவேநிதிப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்யா, வெளிநாடுகளின் உதவியைக்கோர முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விசாரணை நடத்த கோரிக்கை:

குர்ஸ்க் கப்பல் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்றக் குழுஅமைக்கவேண்டும் என்று ரஷ்ய நாடாளுமன்றத்தின் இரு கட்சிகள் கோரிக்கைவிடுத்துள்ளன.

கப்பல் விபத்துக்குள்ளான உடனேயே மீட்புப் பணிகளை மேற்கொண்டிருந்தால்கப்பலுக்குள் சிக்கியவர்களை உடனே மீட்டிருக்க முடியும்.

ஆனால், வெளிநாட்டு மீட்புக் குழுவின் உதவியைக் கோர ரஷ்ய அதிபர் புடின்தாமதப்படுத்திவிட்டார். இறுதியில் நார்வே, பிரிட்டன் மீட்புக் குழுவினர் வந்தாலும்,கப்பல் ஊழியர்களை உயிருடன் மீட்க முடியவில்லை.

கப்பல் ஊழியர்கள் இறந்ததற்கு புடினின் காலதாமதம் காரணம்தான் காரணம் என்றுரஷ்ய அரசியல் தலைவர்கள் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+