வீரப்பனுடன் கூட்டு சேர்ந்த இந்த தமிழ்த் தீவிரவாதிகள் யார்?

Subscribe to Oneindia Tamil

மிழ் தீவிரவாதிகள் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு விடுதலைப்படையினர், தமிழ் தேச மீட்புப்படை இந்த இரு அமைப்புகளும் தமிழ்தீவிரவாதிகளின் அமைப்புகளில் மிகப்பெரியவை.

இந்த அமைப்பில் பெரும்பாலனவர்கள் இளைஞர்கள் தான். துடிப்பானவர்கள். பசி, தூக்கம், துக்கம், சந்தோஷம் ஆகியவற்றை மறந்து தனித்தமிழ்நாடு ஒன்று தான் இன்றைய இந்தியாவுக்குத் தேவை என்று உறுதியான கொள்கை உடையவர்கள்.

அது என்ன தனித் தமிழ்நாடு என்று விசாரிக்க அதிர்ந்து போனாம். தனித் தமிழ்நாடு என்றால் இந்தியா மாதிரி. மற்ற நாடுகள் மாதிரிதமிழ்நாட்டை தனி நாடக அறிவிக்கவேண்டும் என்பதுதான் இந்த தமிழ் தீவிரவாதிகளின் உறுதியான கொள்கை.

இந்தியாவின் ஒரு மாநிலமாக தமிழ்நாடு இல்லாமல் தனி நாடாக அறிவித்துவிடவேண்டும். இதை அமல்படுத்த பல இளைஞர்கள்மாண்டிருக்கிறார்கள் வீணாய் என்பதும் கடந்த கால உண்மை.

தமிழ் தேசிய இயக்கங்களுக்கு முன்னோடி புலவர் கலியபெருமாள். பெண்ணாடம் கிராமத்தில் வசிக்கும் இந்த ஏழுபத்தியேழு வயதானகலியபெருமாளுக்கு மிகப்பெரிய நக்ஸலைட் பின்னணி உண்டு. இவர்தான் தமிழ்நாடு விடுதலைப்படையினருக்கு வழிகாட்டி, குருஎல்லாம்.

இந்திய அளவில் நக்ஸலைட் இயக்கத்தை ஆரம்பித்த சாரு மஜூம்தார், முப்பது வருடங்களுக்கு முன்பு தமிழகத்திற்கு வந்திருக்கிறார். சாருமஜூம்தாரை பெண்ணாடம் அருகில் உள்ள முந்திரிக் காட்டுக்கு வரவழைத்து கூட்டம் போட்டவர் தான் இந்த கலியபெருமாள். ஆசிரியராகவாழ்வைத் தொடங்கியவர்.

அந்தப்பணியை விட்டுவிட்டு, பெரும் நிலப்பிரபுக்களின் நிலங்களுக்கு தனது தோழர்களுடனும் , பொது மக்களுடனும் திரண்டு சென்றுஅதிரடியாக அறுவடை நடத்தி நெல் மூட்டைகளை கடத்தி வந்து கிராமத்தினருக்கு பகிர்ந்து கொடுத்தவர். பெண்ணாடம் பகுதி சர்க்கரைஆலைகளுக்கு எதிரான போராட்டங்களையும் தலைமையேற்று நடத்தியவர்.

1970 ம் வருடம் அவரது சொந்த கிராமமான செளந்திரசோழபுரத்திலுள்ள தோப்பில் கணேசன், காணியப்பன், சர்ச்சில் ஆகிய மூன்றுஇளைஞர்கள் இவர் முன்னிலையில் வெடிகுண்டு தயாரித்தபொழுது எதிர்பாராத விதமாக வெடிகுண்டு வெடித்து மூன்று இளைஞர்களும்அதே இடத்தில் சிதறிப்போனார்கள்.

அருகில் இருந்த கலியபெருமாளுக்கும் பலத்த காயம். இறந்துபோன மூன்று தீவிரவாத இளைஞர்களின் உடல்களையும் சாக்கில் போட்டுகட்டி அருகிலேயே புதைத்துவிட்டு, தலைமறைவாகிவிட்டார் கலியபெருமாள்.

இவர் மீது கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் உள்ளன. 1971-ல் சிறையில் அடைக்கப்பட்ட கலியபெருமாள் 1983-ம் ஆண்டுகாலவரையற்ற பரோலில் வெளியே வந்தார். இன்றும் இவர் தான் இந்த தமிழ் தீவிரவாத இளைஞர்களுக்கு காட்பாதர்.

சாருமஜூம்தார் தோற்றுவித்த சி.பி.எம்.எல் இயக்கம் தமிழகத்தில் வேரூன்ற காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் கலியபெருமாள்.இவர்தான் தமிழ் தேசிய இயக்கங்களின் ஆணிவேர்.

ஆரம்பத்தில் கரும்பு விவசாயிகளுக்கு, ஏழைகளுக்காக குரல் கொடுத்தவர் சாரு மஜூம்தாரால் ஈர்க்கப்பட்டார். எதற்குமே புரட்சிதான் தீர்வுஎன்று களமிறங்கியது புலவர் கலிய பெருமாள் தலைமையிலான ஒரு குழு. சப்தமில்லாமல் பலரைக் கலக்க ஆரம்பித்த இவர்கள் குறித்து1970-களில் நடந்த குண்டுவெடிப்புக்குபின் தான் வெளியுலகுக்கே தெரியஆரம்பித்தது.

இந்தியா என்பது ஒரே நாடல்ல. பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய துணைக்கண்டம். இந்தியாவில் பல்வேறு மொழிகள்பேசக்கூடியவர்களும், தனித் தனி கலாச்சாரத்தை கொண்டவர்களாகிய பல்வேறு இனமக்கள் வாழ்கிறார்கள். ஆகையால் அகில இந்தியஅளவிலான புரட்சி என்பது உடனடியாக சாத்தியம் இல்லை. தேசிய இன விடுதலைதான் இதற்கு வழிவகுக்கும்.

எனவே தமிழ்நாடு விடுதலை என்பதுதான் சரியான தீர்வு என்பது தான் இவர்களின் ரத்தத்தில் கலந்த கொள்கை.

1986-ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தால் தான் இந்தியாவின் ஒட்டு மொத்த பார்வையும் தமிழ்நாடு விடுதலைப் படையினரின் மீதுதிரும்பியது. 1986-ம் வருடம் ஜனவரி மாதம் திருவையாற்றில் நடந்த தியாகராஜர் ஆராதனை விழாவிற்கு ராஜீவ்காந்தி வந்திருந்தார்.

அந்த சமயத்தில் குடமுருட்டி பாலத்தில் பயங்கரசப்தத்துடன் வெடிகுண்டு ஒன்று வெடித்துச் சிதறியது. அதிர்ந்து போனார்கள் அதிகாரிகள்.காரணம் ராஜீவ்காந்தி அந்த பாலத்தைக்கடந்து சில நிமிடங்கள் தான் ஆகியிருந்தன. குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் சில துண்டுகாகிதங்களும் பறந்து கிடந்தன.

தமிழ்நாடு விடுதலைப்படை என்று அந்த காகிதத்தில் எழுதப்பட்டிருந்தது. இதன் பிறகுதான் இந்த தீவிரவாதிகளை அடக்க தனி க்யூ ப்ராஞ்ச்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த தீவிரவாதிகளுக்கு அகில இந்திய தலைமை என்பது புலவர் கலியபெருமாள் தலைமையில் செயல்பட்டு வந்த அமைப்புத் தான்.

தேசிய இன விடுதலை என்பது புரட்சி, வன்முறை இவற்றின் அடிப்படையில் தான் வரவேண்டும். தனித்தமிழ்நாடு அவசியம் வேண்டும்என்று சில இளைஞர்கள் தலைமையுடன் முரண்பட்டார்கள். அகில இந்தியத் தலைமை ஏற்றுக் கொள்ளாததால் அதிலிருந்து வெளியேறியதமிழரசன் தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி ( மார்க்ஸிய லெனினிஸ்ட்) என்ற கட்சியை உருவாக்கினார்.

தமிழக விடுதலை கோரிய இக்கட்சியின் மிகக் கட்டுப்பாடான அதிரடிப்படை பிரிவுதான் தற்பொழுது பரபரப்பாக பேசப்படுகிற தமிழ்நாடுவிடுதலைப்படை.

பொன்பரப்பி , பெண்ணாடாம் பகுதியில் உள்ள முந்திரிக்காடுகள் தான் தமிழ்நாடு விடுதலைப்படையின் பயிற்சிக்களமானது. பணத்தைஅள்ளிக் கொடுக்கும் முந்திரிக்காட்டு வருமானத்தை உழைப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் போய்ச்சேர விடாமல், சில தனியார்முதலாளிகள் லாபம் கொழித்துக்கொண்டிருந்தனர்.

இதை மாற்ற முந்திரி உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைக்க சுப்ரீம் கோர்ட்வரை போய் வந்தார் தமிழரசன். இதனால் முந்திரிவிவசாயிகள் மத்தியில் தமிழரசனுக்கு மதிப்பு உயர்ந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+