500 சிறை வார்டன் பதவிக்கு 53,000 பேர் போட்டி
Subscribe to Oneindia Tamil
கோவை:
தமிழகம் முழுவதும் 500 சிறை வார்டன் பதவிக்கு 53,000 பேருக்கு உடல் தகுதிச்சோதனை திங்கள்கிழமை நடந்தது.
சென்னை, கடலூர், வேலூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய 8நகரங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டன.
இந்த தேர்வுகளில் கலந்து கொண்டவர்களில் 10.700 பேர் பெண்கள். உடல் தகுதிச்சோதனை இம்மாதம் 26-ம் முடிவடைந்து விடும். அதன் பின் எழுத்துத்தேர்வுநடைபெறும். இறுதியில் நேர்முகத் தேர்வுக்கு 1,500 பேர்தேர்ந்தெடுக்கப்படுவர்.
தீயணைப்புத்துறை பணியாளர் தேர்வு:
தீயணைப்புத் துறை வீரர்களுக்கான தேர்வு இம்மாதம் 28-ம் தேதி நடக்கவிருக்கிறது.மொத்தம் 1,057 காலியிடங்கள் உள்ளன.
இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வுக்கு 3,300 பேர்அழைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications