திருப்பூரில் பஸ் மோதி 2 மாணவர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
கோவை:
திருப்பூர் அருகே மோட்டார் பைக்கும் அரசுபஸ்சும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் பைக்கில் சென்றஎன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே மாண்டனர்.
பெருமாநல்லூர் அருகே பெருந்துறை செங்குந்தர் என்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கார்த்திகேயன் (23),சரவணன் (22). இருவரும் கல்லூரி முடிந்து மாலையில் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, ஈரோட்டிலிருந்து கோவைக்குச் சென்ற அரசு பஸ் அவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்தஇருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பஸ் டிரைவரைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications