அடுத்த இலக்கு நீண்ட தூர நீச்சல் உலகக் கோப்பைதான் - பூலா சவுத்ரி
கல்கத்தா:
எனது அடுத்து இலக்கு நீண்ட தூர நீச்சல் உலகக் கோப்பைப் போட்டிதான் என்று இந்தியாவின் சிறந்த நீண்ட தூர நீச்சல் வீராங்கனை புலா சவுத்ரி தெரிவித்தார்.
30 வயதான அவர் சமீபத்தில்தான் ஜிப்ரால்டர் ஜலசந்தியை சாதனை நேரத்தில் நீந்திக் கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 18-ம் தேதி, ஸ்பெயினில் உள்ள புன்டா தாரிஃபா தீவிலிருந்து நீந்தத் தொடங்கிய புலா சவுத்ரி 3 மணி 35 நிமிடங்களில் ஜிப்ரால்டர் ஜலசந்தியை நீந்திக்கடந்தார்.
இதன் மூலம் 1988-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் மரியலூயிஸா கபாநெரோ என்ற வீராங்கனை ஏற்கெனவே புரிந்திருந்த சாதனையை அவர் முறியடித்தார்.மேலும் இந்திய வீராங்கனை காவேரி தாக்கூர் புரிந்திருந்த ஆசியச் சாதனையையும் அவர் முறியடித்தார்.
புதிய சாதனை படைத்துவிட்டு கல்கத்தாவுக்குப் புதன்கிழமை வந்த அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது அவர் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். எதிர்காலத்தில் நீண்ட தூர நீச்சல் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கு பெறவேண்டும் என்பதுதான் எனதுவிரும்பம். குறிக்கோள்.
எனது இந்த விருப்பத்தை இந்திய நீச்சல் பெடரேஷன் ஏற்றுக் கொண்டு அதற்கான நிதி உதவி உள்பட பல வசதிகளைச் செய்து தரவேண்டும் என்று அவர்கேட்டுக் கொண்டார்.
ஜிப்ரால்டர் ஜலசந்தியை குறைந்த நேரத்தில் நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ள புலா சவுத்ரி, இரண்டு முறை ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை படைத்தஒரே ஆசியப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications