தமிழக, கர்நாடக முதல்வர்கள் நாளை சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Gopal with Verrappan&sethukkuli Govindan
வீரப்பனுடன் பேசிக்
கொண்டிருக்கிறார் கோபால். உடன்
(இடது மூலையில்)கூட்டாளி
சேத்துக்குளி கோவிந்தன்.

ராஜ்குமார் கடத்தல் சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியும், கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவும் சென்னையில் வெள்ளிக்கிழமைமீண்டும் சந்தித்துப் பேசுகின்றனர்.

கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்றான். அவர்களை விடுவிக்க 14 கோரிக்கைகளை வீரப்பன்கூறியிருந்தான்.

இக்கோரிக்கைகளுக்கு தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பதில்களை எடுத்துக் கொண்டு வீரப்பனைச் சந்திக்கச் சென்றார் நக்கீரன் கோபால்.

இரு நாட்களுக்கு முன் வீரப்பனைச் சந்தித்துப் பேசிய நக்கீரன் கோபால், கோரிக்கைகளுக்கு இரு மாநில அரசுகளின் பதில்களைக் கொடுத்துவிட்டுவியாழக்கிழமை காலை சென்னை வந்து சேர்ந்தார்.

பின்னர் முதல்வர் கருணாநிதியை, கோபாலபுரத்தில் அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்தார் நக்கீரன் கோபால். உடன் நக்கீரன் இணை ஆசிரியர்காமராஜும் இருந்தார்.

இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக முதல்வரும், கோபாலும் தீவிர ஆலோசனை நடத்தினர். காட்டுக்குள் வீரப்பனைச் சந்தித்தது, ராஜ்குமாரின்உடல்நிலை, இரு மாநில அரசுகளின் கோரிக்கைகள் குறித்து வீரப்பன் தெரிவித்த கருத்துக்கள் பற்றி முதல்வரிடம் கோபால் எடுத்துரைத்தார்.

இச் சந்திப்பில் தலைமைச் செயலர் ஏ.பி. முத்துசாமி, உள்துறைச் செயலர் சாந்தா ஷீலா நாயர், சிறப்பு நடவடிக்கைக் குழுத் தலைவர் கூடுதல் டிஜிபி அலெக்சாண்டர்ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முதல்வருடன் தீவிர ஆலோசனைக்குப் பிறகு வீட்டுக்கு வெளியே காத்திருந்த நிருபர்களிடம் கோபால் கூறியதாவது:

காட்டுக்குள் நான் சென்றது, வீரப்பனைச் சந்தித்தது உள்ளிட்டவை குறித்து முதல்வரிடம் விவரித்தேன். நான் காட்டுக்குள் சென்று வந்தது தொடர்பாகஇரண்டு வீடியோ கேசட்டுகளையும் முதல்வரிடம் கொடுத்துள்ளேன். அந்த கேஸட்டுகளில் இரு மாநில அரசுகளின் பதில்களுக்கு வீரப்பன் தெரிவித்துள்ளகருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

ராஜ்குமார் கடத்தல் சம்பவம் குறித்து தமிழக முதல்வரும், கர்நாடக முதல்வரும் மீண்டும் வெள்ளிக்கிழமை காலை சென்னையில் சந்தித்துப் பேச உள்ளனர்.அதற்காக வெள்ளிக்கிழமை காலை கிருஷ்ணா சென்னை வருகிறார்.

நானும் வெள்ளிக்கிழமை மாலை நிருபர்களைச் சந்தித்து அனைத்து விவரங்களையும் தெரிவிப்பேன் என்றார் கோபால்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+