குற்றாலம் அருவிகளில் வெள்ளம்

Subscribe to Oneindia Tamil

குற்றாலம்:

குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அருவிகளில் குளிக்க மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் அருவிகள் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவில் சிமெண்ட் வளைவைத் தாண்டி தண்ணீர் விழுகிறது.

இது போல் பழைய குற்றால அருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி போன்ற அருவிகளிலும் தண்ணீர் அதிகமாக விழுகிறது.

அடுத்த சில நாட்களுக்கு அருவிகளில் தண்ணீர் விழுவதும் தொடரும் என்றும், அவ்வப்போது தண்ணீர் அளவு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஐந்தருவியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 5ல் 3 அருவிகளில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் விழுகிறது. அதனால், அங்கும் அருவிகளில் குளிக்கதடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், அருவிகளில் குளிக்க மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது கீழே விழுந்து ஓடிவரும் தண்ணீரில் குளிக்க மட்டுமே அவர்கள்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அருவிப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். அருவிகளில் தண்ணீர் அதிகமாக விழுவதால் குற்றாலத்துக்கு அதிக அளவில் மக்கள்வரத் தொடங்கியுள்ளனர்.

ஆனால், அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.

குற்றாலத்திலேயே அங்கேயே தங்கியிருந்து அருவிகளில் தண்ணீர் குறைந்தபிறகு குளிப்பதற்காக லாட்ஜுகளில் தங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+