ஒலிம்பிக் கால்பந்துக்கு ஆயுசு 100!
ஹம்பர்க்:
ஒலிம்பிக் போட்டிகளில் கால்பந்து ஆட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் அடுத்த மாதம் 15-ம் தேதி தொடங்கும் ஒலிம்பிக் போட்டியில் உலகின் மிகப் பிரபலமான விளையாட்டான கால்பந்துதனது 100 ஆண்டைக் கொண்டாடுகிறது.
இந்த 100 ஆண்டு ஒலிம்பிக் கால்பந்து தங்கப் பதக்கத்தை வெற்றி கொள்ள உலகின் பல நாடுகள் மோதவுள்ளன.
4 முறை உலகக் கோப்பையை வென்ற கால்பந்து உலகின் ஜாம்பவான் பிரேஸில் அணி இந்த முறை தங்கப் பதக்கத்தை வெல்லும் முயற்சியில்ஈடுபட்டுள்ளது. அதற்காக அணியில் பல இளைய, புது முகங்களை அந்த அணி அறிமுகப்படுத்தியுள்ளது.
பீலே, ரொமாரியோ, ரொனால்டோ ஆகியோரது வரிசையில் அடுத்து ரொனால்டிங்கோ என்ற வீரரின் பெயர்தான் இப்போது பிரேஸில் முழுவதும்உச்சரிக்கப்படுகிறது.
அவரது ஆட்டம் சிறப்பாக உள்ளதே இதற்குக் காரணம். 20 வயதான இவர், அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் சாதனை படைத்தார்.அந்த ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரேஸில் வென்றது குறிப்பிடத்தக்கது.
அவர் தான் ஆடிய கடைசி 7 ஆட்டங்களில் 9 கோல்களை அடித்துள்ளார். ரொனால்டிங்கோ போன்ற இளம் வீரர்களுடன் ரோனால்டோ போன்றஅனுபவமிக்க மூத்த வீரர்களும் பிரேஸில் அணி சார்பில் இந்த ஒலிம்பிக்கில் விளையாட உள்ளனர்.
நடப்புச் சாம்பியன் நைஜீரியா, உலகச் சாம்பியன் பிரான்ஸ் உள்பட பல முன்னாள் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியன்கள் இந்த 100 ஆண்டு ஒலிம்பிக்கால்பந்து ஆட்டத்தில் தங்கப் பதக்கம் வெல்லும் முடிவில் உள்ளன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications