கதை: முக்கோணக் காதல் முடிவு: 2 தற்கொலைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இதுவொரு முக்கோணக் காதல் கதை. அதன் முடிவு இரண்டு தற்கொலைகள்.

சினிமா கதை போல ஒரே இளைஞரை காதலித்த இரண்டு தோழிகள் ஒரே நாளில், ஒரேமரத்தில், ஒரே கயிற்றில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்கொடைக்கானல் அருகே நடந்துள்ளது.

கொடையிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் மன்னவனூர் அக்கரைக் காடு என்றகிராமம் உள்ளது. இக்கிராமத்தில் வசிப்பவர் வண்டிக்கார அய்யாவுத் தேவர் (பெயர்கூட சினிமா பாணியில் தான் இருக்கிறது). இவரது மகள் அங்கம்மாள் (18).

இதே கிராமத்தைச் சேர்ந்த ராஜாங்கம் மகள் தனலட்சுமியும் (வயது 18),அங்கம்மாளும் நெருங்கியத் தோழிகள். இணை பிரியாத தோழிகள் என்றுஒட்டுமொத்த கிராமமே வர்ணித்து வந்தது. அக்கிராமத்து இளைஞர் செல்வத்திற்குஇவர்கள் மீது காதல் பிறந்தது.

23 வயதான செல்வம் விவசாயி. அழகான தோற்றம், உண்மையான உழைப்புஆகியவற்றின் மூலம் நல்ல பெயர் பெற்றிருந்த செல்வத்திற்கு, இணை பிரியாததோழிகள் மீது தீராத காதல். அந்த மயக்கத்தில் இருவரையும் காதலித்து திருமணம்செய்து கொள்ள திட்டமிட்டார்.

இவ்வளவு ஒற்றுமையாக இருக்கும் தோழிகள், தனக்கு மனைவியாக வந்தாலும்ஒற்றுமையாக இருப்பார்கள் என்று காதல் கணக்கு போட்டார். அதை நிறைவேற்றஎண்ணி அங்கம்மாளுக்கும், தனலட்சுமிக்கும் தனித் தனியாக காதல் கணைகளைவீசினார். அங்கம்மாளை சந்திக்கும் போது அவளை மட்டுமே காதலிப்பதாக கூறினார்.அதேபோல் தனலட்சுமியிடம் "டயலாக் பேசினார்.

இருவரிடமும் காதல் பற்றி ஒருவர் மற்றொருவரிடம் "மூச் விடக் கூடாது என்றுநிபந்தனை போட்டு விட்டார். இதனால் உடன் பிறவா தோழிகளான இருவரும் தங்கள்காதலை மறைத்து விட்டனர். இப்படியாகத்தானே, இந்த முக்கோணக் காதல் வளர்ந்தது.

பெற்றோருக்குத் தெரியாமல் இருவரையும் காதல் மணம் புரிந்து விட நாள் பார்த்துக்கொண்டிருந்த செல்வம், தனது திட்டத்தை காதலிகளிடம் தெரிவித்தார். செல்வத்திற்கும்தனக்கும் திருமணம் என்ற ஆசையில் வீட்டில் இருந்த 12 பவுன் நகைகளுடன்கிளம்பினார். அதே ஆசையில் தனலட்சுமியும் புறப்பட்டார்.

மூவரும் கொடைக்கானல் பகுதியில் உள்ள ஒரு மலைக் கோயிலுக்கு வந்தனர்.

ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டதும் திடுக்கிட்டனர். காதல் சஸ்பென்ஸ் மெல்லஉடைந்தது. உண்மைகளை விளக்கிய செல்வம் இருவரையும் மணம் முடிக்கவிரும்புவதாக தெரிவித்தார். என்னை மட்டும் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றுதோழிகள் கெஞ்ச ஆரம்பித்தனர்.

மணந்தால் இருவரையும் மணப்பேன் இல்லாவிட்டால்... என்று மகாதேவி சினிமாவசனம் பேசிய செல்வத்தால் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதை அறிந்து கண்ணீர்விட்டனர் தோழிகள். ஆனால், செல்வத்தின் பிடிவாதம் தளரவில்லை.

செல்வத்தின் ஆசைப்படி இருவரும் அவரை மணக்க இவர்கள் தயாராக இல்லை.எனவே நீண்ட வாக்குவாதத்திற்கு பின்னர் செல்வம், இரு தோழிகளையும் வேண்டாம்என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

செல்வம் தங்களை நிராகரித்ததால், அதிர்ச்சியடைந்தனர் இரு தோழிகளும்.அவமானம் தாங்க முடியாத நிலையில் வீட்டுக்கு திரும்பினாலும் மானம் போய் விடும்என்று கலங்கிய இரு பெண்களும் அங்கேயே வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவுசெய்தனர்.

உடனே, அங்கிருந்த கொய்யா மரத்தில் ஒரு கயிற்றைக் கட்டி இரு முனையிலும் சுருக்குபோட்டு கழுத்தை நீட்டினர். சில விநாடிகளில் யாருமில்லாத அந்த காட்டுப் பகுதியில்இருவரும் பிணமாக தொங்கினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+