ரங்கராஜன் அஸ்தி 26-ம் தேதி காவிரியில் கரைப்பு
சென்னை:
மறைந்த மத்திய மின்துறை அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் அஸ்தி அவரது தொகுதியான திருச்சியில் பொதுமக்கள் அஞ்சிலுக்குப் பின் காவிரிஆற்றில் ஆகஸ்ட் 26 ம் தேதி கரைக்கப்படும்.
இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:
பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு பிரிவு தலைவர் எஸ்.பி.கிருபாநிதி, மறைந்த அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் அஸ்தியை விமானம் மூலம்டெல்லியிலிருந்து வியாழக்கிழமை சென்னைக்குக் கொண்டு வருவார். அவருடன், அமைச்சரின் மனைவி கிட்டியும் வருவார்.
சென்னையில் உள்ள பாரதிய ஜனதாக் கட்சி அலுவலகமான கமலாலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை அஸ்திவைக்கப்படும். பிற்பகல் 3.30 மணிக்கு அமைச்சரின் அஸ்தி விமானம் மூலம் மீண்டும் சென்னையிலிருந்து திருச்சிக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கிருந்துஊர்வலமாக ரங்கராஜன் குமாரமங்கலத்தின் அலுவலகம் உள்ள மரக்கடைப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படும்.
அங்கு 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம். ஆகஸ்ட் 26 ம் தேதி நாமக்கல் வழியே அமைச்சரின் சொந்தஊருக்கு அஸ்தி எடுத்துச் செல்லப்படும். அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக காலை 8 மணி முதல் 10 மணி வரை வைக்கப்பட்டிருக்கும். பின்னர் காவிரிஆற்றில் கரைக்கப்படும். அமைச்சர் ரங்கராஜனின் மகன் மோகன் குமாரமங்கலம் அஸ்தியைக் கரைப்பார் என்று பாரதிய ஜனதாக் கட்சிவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications