மேட்ச் பிக்ஸிங் விசாரணையை தாமதப்படுத்துகிறது இந்தியா .. தெ.ஆப்பிரிக்கா புகார்

Subscribe to Oneindia Tamil

கேப் டவுன்:

மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை தாமதமாவதற்கு இந்தியாதான் காரணம் என்று தென் ஆப்பிரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியாவில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அப்போது கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுடன் சேர்ந்துமேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹான்ஸி குரோனியே மீது குற்றம் சாட்டப்பட்டது.

இக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த எட்வர்ட் கிங் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நியமித்தது.அதன்படி அந்த விசாரணை கமிஷன் குரோனியோ உள்பட பல கிரிக்கெட் வீரர்களிடம் விசாரணை நடத்தியது.

முதற்கட்ட விசாரணை முடிந்து தனது விசாரணை அறிக்கையை கிரிக்கெட் வாரியத்திடம் விசாரணை கமிஷன் அளித்துள்ளது. இந் நிலையில், இந்த விசாரணைமேலும் தாமதமாகவதற்கு இந்தியா தான் காரணம் என்று கிங் கமிஷன் கூறியுள்ளது.

மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு தொடர்பாக தென் ஆப்பிரிக்க விசாரணைக் குழு இந்தியாவில் விசாரணை நடந்த இந்திய அதிகாரிகள் அனுமதி தர தாமதம்செய்து வருகின்றனர் என்று கமிஷனின் செய்தித் தொடர்பாளர் ஜான் பாகான் கூறியுள்ளார்.

இந்தியாவில் விசாரணை நடத்த அனுமதிக்கும்படி முறைப்படி ஏற்கெனவே முறையீடு செய்துள்ளோம். ஆனால், இதுவரை இந்திய அதிகாரிகளிடமிருந்து பதில்வரவில்லை என்றார் அவர்.

இந்தியாவுக்குச் செல்ல ஒரு தனிக் குழு தயாராக உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் இக் குழு இந்தியா சென்று விசாரணை நடத்தும். அப்படி ஒருவாரத்துக்குள் அனுமதி கிடைக்காத பட்சத்தில் போன் மூலம் விசாரணை நடத்தப்படும்.

அக்டோபர் 2-ம் தேதி கிங் கமிஷனின் விசாரணை தென் ஆப்பிரிக்காவில் மீண்டும் தொடங்க உள்ளது. இந்தியாவுக்கு விசாரணைக் குழு சென்றால்செப்டம்பர் 15-ம் தேதிக்குள் தென் ஆப்பிரிக்காவுக்குத் திரும்பி அக்டோபர் 2-ம் தேதிக்கான விசாரணைக்குத் தயாராக வேண்டியுள்ளது.

முறையான மற்றும் சரியான விசாரணைக்குப் போதுமான கால அவகாசம் இல்லை. இந் நிலையில், இந்திய அதிகாரிகள் விசாரணைக் குழுவுக்கு அனுமதிகொடுக்க தாமதித்து வருகின்றனர் என்றார் பாகான்.

இதற்கிடையே, இந்தியாவில் நடைபெறும் மேட்ச் பிக்ஸிங் விசாரணை தொடர்பாக ஹன்ஸி குரோனியேவை இந்தியாவுக்குக் கொண்டு வந்து விசாரணைநடத்த இந்திய அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.

இந்தியாவுக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையே விசாரணைக்காக ஆட்களை அழைத்துச் செல்ல முடியாது என்றாலும், விசாரணைக்காக தென்ஆப்பிரிக்காவை விட்டு வெளியே செல்ல ஹான்ஸி குரோனியேவும் விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+