கோபால் குறித்து பேசத் தடையை நீக்க கோரி ஜெ. மனு
சென்னை:
நக்கீரன் கோபால் பற்றி அறிக்கை வெளியிட விதித்த தடையை நீக்க கோரி சென்னைஉயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மனுத் தாக்கல்செய்துள்ளார்.
சந்தன வீரப்பன் விவகாரத்தில் அரசு தூதராக செயல்படும் நக்கீரன் பத்திரிகைஆசிரியர் கோபாலை கடுமையாக விமர்சித்து ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.அதை ஆட்சேபித்து ஜெயலலிதா மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார் கோபால்.
இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ராமமூர்த்தி, இனிமேல் கோபால் பற்றிஜெயலலிதா அறிக்கை வெளியிட இடைக்காலத் தடை விதித்தார். இந்த தடையை நீக்கவேண்டும் என்று ஜெயலலிதா வியாழக் கிழமை ஒரு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், எனக்கு எந்தவித நோட்டீசும் அனுப்பாமல் ஒரு தரப்பு விசாரணையின்அடிப்படையில் இந்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நான் ஒரு பெரிய கட்சியின் தலைவியாக உள்ளேன். அரசியல் சட்டத்தின் கீழ் எனக்குஉள்ள பேச்சுரிமையை தடுக்கும் வகையில் இடைக்கால தடை வழங்கப்பட்டு உள்ளது.
இந்த தடை மூலம் உண்மைகளை மறைக்க கோபால் முயற்சிக்கிறார். வீரப்பனைஎளிதில் சந்திக்கும் கோபால் அவனை கைது செய்ய அரசுக்கோ, போலீசாருக்கோஉதவி செய்யவில்லை. இந்த மாநிலத்தில் இத்தகைய அநியாயம் நடக்கும்போது அதைபார்த்துக் கொண்டு என்னால் சும்மா இருக்க முடியாது.
போலீசாரின் மரியாதையை குறைக்கும் வகையில் இந்த பிரச்னை கையாளப்படுகிறது.பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டுதான் கோபால் பற்றி அறிக்கையில்குறிப்பிட்டேன். இது அவதூறு என்று கூற முடியாது.
நக்கீரன் கோபாலுக்கு எதிராக தமிழகம் மற்றும் கர்நாடகாவில் கிரிமினல் வழக்குகள்தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இப்போது அந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுஉள்ளது. கிரிமினல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு அரசு தூதர் அந்தஸ்துவழங்கப்பட்டுள்ளது.
எனது அறிக்கையில் இதைப் பற்றி கூறியதில் தவறில்லை. எனவே நக்கீரன் கோபாலைபற்றி அறிக்கை வெளியிட எனக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications