பஹ்ரைன் விமான விபத்தில் 143 பேர் பலி
மனாமா (பஹ்ரைன்):
பஹ்ரைன் தலைநகர் மனாமா அருகே 143 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த கல்ப்ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் கடலில் வெடித்துச் சிதறியது. இதில்விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர்.
பஹ்ரைன் விமான நிலையத்தில் இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விமானம்வெடித்துச் சிதறியது. கெய்ரோவிலிருந்து இந்த விமானம் பஹ்ரைன் வந்துகொண்டிருந்தது. விமானத்தில் 143 பேர் இருந்ததாகவும், அனைவரும் உயிரிழந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
விமானத்தின் இரண்டு என்ஜீன்களில் ஒன்றில் தீப்பிடித்துக் கொண்டதால் விமானம்வெடித்துச் சிதறியதாகக் கூறப்படுகிறது.
விமானம் வெடித்துச் சிதறி கடலில் விழுந்தவுடன் மீட்புப் பணிகள் வெகுவேகமாகதுவங்கின. பஹ்ரைன் மீட்புக் குழுவினருடன் அமெரிக்க ஹெலிகாப்டர்களும், மீட்புக்குழுவினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 137 உடல்கள்மீட்கப்பட்டுள்ளன. விமான விபத்து இரவில் நடந்ததால் மீட்புப் பணியில் தாமதம்ஏற்பட்டது.
விமானத்தில் இருந்தவர்கள் பெரும்பாலானவர்கள் அரேபியர்கள். அவர்களில்பெரும்பாலும் குழந்தைகள் என்று தெரிய வந்துள்ளது.
3-வது மிகப் பெரிய விமான விபத்து:
சமீப காலத்தில் நடந்த மூன்றாவது மிகப் பெரிய விமான விபத்து இது என்பதுகுறிப்பிடத்தக்கது. பிரான்ஸில் கன்கார்டு விமானம் வெடித்துச் சிதறியதில் 100-க்கும்மேற்பட்டோர் இறந்தனர். பிகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் விமானம்விபத்துக்குள்ளானதில், 60-க்கும் மேற்பட்டோர் இறந்தனர் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications