உர ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளி டெல்லி வருகை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ரூ 133 கோடி யூரியா ஊழல் வழக்கில் முக்கியக் குற்றவாளியான துருக்கியைச் சேர்ந்த ஏஜன்ட் பின்டோவை சி.பி.ஐ குழு வியாழக்கிழமைபிரிட்டனிலிருந்து டெல்லிக்குக் கொண்டு வந்தது.

புதன்கிழமை பிற்பகல் அவர் சி.பி.ஐ அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவார் என்று தெரிகிறது.

மத்திய அரசுக்குச் சொந்தமான தேசிய உரக் கழகத்திலிருந்து உரம் வாங்குவதற்காக துருக்கியைச் சேர்ந்த கர்சான் நிறுவனத்திற்கு ரூ 133 கோடிவழங்கப்பட்டதாகவும், அதற்கு அவர்கள் ரூ 133 கோடிக்கான உரங்களை தேசிய உரக் கழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர் என்றும் கூறப்பட்டது.

இதுதொடர்பாக சி.பி.ஐ. நடத்திய விசாரணையில், அப்படி எதுவும் வழங்கப்படவில்லை. கான்டிராக்டர் பின்டோவும், அவரது நண்பர் கன்வாரும் சேர்ந்துபோலிக் கையெழுத்து போட்டு உரம் அனுப்பியுள்ளதாகக் கணக்குக் காட்டியுள்ளனர் என்றும், இதில் ரூ 133 கோடி ஊழல் நடந்துள்ளது என்று தெரியவந்தது.

இதையடுத்து 1997 ம் ஆண்டு நவம்பர் 11 ம் தேதி டெல்லி நீதிமன்றம் பின்டோவுக்கு வாரன்ட் பிறப்பித்தது. லண்டனில் வைத்து டிசம்பர் 11 ம் தேதிபின்டோ கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி டெல்லி இன்டர்போல் அலுவலகம், லண்டனிலுள்ள இன்டர்போல்தலைமையகத்துக்குக் கோரிக்கை விடுத்தது.

இந்த நிலையில், பின்டோவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் சிக்கல் எழுந்தது. பின்டோவை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டுமெனில் மத்தியஉள்துறை அமைச்சர் அத்வானி, சி.பி.ஐ.இயக்குநர் ராகவன் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் வாங்க வேண்டும். அப்போதுதான்அவரை இந்தியாவிற்குக் கொண்டு வர முடியும். இதைத் தீர்க்கும் வகையில், போலீஸ் டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு சட்ட ஆலோசகர் ஆகியோர்கொண்ட சிபிஐ குழு திங்கள்கிழமை லண்டன் விரைந்தது. இக்குழு பின்டோவை விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்து வந்தது.

பின்டோ வந்துள்ளதால், யூரியா ஊழல் வழக்கில் புதிய திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+