மீண்டும் மீண்டும் கேஸட் .. ராஜ்குமார் வருவது எப்போது?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நீண்ட பெரு முயற்சிக்குப் பிறகு வீரப்பனைச் சந்தித்துவிட்டு வெற்றிகரமாக இந்த முறையும் வெறுங்கையுடன்" திரும்பியுள்ளார் நக்கீரன் கோபால்.

முதன்முறையாக அரசுத் தூதராக சென்றிருந்தபோது கோபாலிடம் பேசியதைவிட இந்த முறை மிகக் கடுமையாக வீரப்பன் பேசியிருப்பதாகக்கூறப்படுகிறது.

தற்பொழுது கோபால் கொண்டு வந்துள்ள கேஸட்டில் உள்ள தகவல்களை அரசு உடனடியாக வெளியிட மறுத்துள்ளது. கர்நாடக முதல்வருடன் விவாதித்துஅதற்குப் பிறகுதான் வெளியிட முடியும் என்கிறார்கள்.

கோபால் இந்த முறை வீரப்பனை சந்திப்பதற்கு மிகுந்த சிரமங்கள் இருந்தது மட்டுமில்லாமல் ஆரம்பத்தில் தமிழ் தீவிரவாதிகளே கோபாலிடம்பேசியதாகவும் கூறப்படுகிறது.

வீரப்பனை சந்திக்கவேண்டும் என்று கோபால் கேட்டதற்கு கூட எதற்கு, ஏன் என்று நிறைய கேள்விகள் இருந்ததாகச் சொல்கிறார்கள். மிகுந்தவற்புறுத்தலுக்குப் பிறகே ராஜ்குமாரை சற்று தூரத்தில் இருந்து கோபாலிடம் காட்டிவிட்டு அவரை திரும்ப அழைத்துச் சென்றுவிட்டனராம் தமிழ்தீவிரவாதிகள்.

வீரப்பனைச் சந்திக்க வேண்டும் என்று கோபால் தொடர்ந்து கேட்க. சில நிமிடங்கள் தான் கோபாலை சந்தித்தாராம் வீரப்பன். பின்னர் கோபாலிடம்ஒரு கேஸட்டைக் கொடுத்து அனுப்பிவிட்டார்கள் என்கிறார்கள்.

காவிரிப் பிரச்சினையைப் பற்றி அவ்வளவாக கண்டுகொள்ளாத வீரப்பன், தமிழ் தீவிரவாதிகள் விடுதலை இத்தனை நாள் இழுத்தது பற்றி விசாரித்ததுடன்அவர்கள் அனைவரையும் என்னிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என்றும் கேட்டிருக்கிறாராம்.

தற்பொழுது கோபால் கொண்டு வந்துள்ள கேஸட்டில் மேலும் சில சிக்கலான கோரிக்கைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவை அனைத்தும்கர்நாடக-தமிழ்நாடு இரு மாநில அரசும் சேர்ந்து முடிவு எடுக்க வேண்டியவை என்பதால் கர்நாடக முதல்வரை தமிழக முதல்வர் அழைத்திருப்பதாகத்தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+