செவ்வாய்க்கிரக ஆராய்ச்சியில் சென்னை மாணவர்கள்
சென்னை:
நாசா ஆராய்ச்சி மையம், செவ்வாய்க் கிரக ஆராய்ச்சியில் பங்கேற்பதற்காக நடத்தும் இறுதித் தேர்வுக்கு சென்னை மாணவர்கள்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா செவ்வாய்க்கிரகம் குறித்து ஆராய்ச்சி நடத்தி வருகிறது. இந்த ஆராய்ச்சியில் அமெரிக்காவைத் தவிரபிற நாட்டு மாணவர்களையும் ஈடுபடுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்காக உலகம் முழுவதிலிருந்து மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் பணி நடந்துவருகிறது.
இதற்கான முதன்மை தேர்வு பெங்களூரில் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடந்தது. இதில் 37 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 12மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த 12 மாணவர்களும் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இறுதித் தேர்வில் கலந்து கொள்கின்றனர். இவர்களில் சென்னையைச் சேர்ந்த ஜெகந்நாதன்,பாலபிரியதர்ஷினி சண்முகம் ஆகிய இரண்டு மாணவர்களும் கலந்து கொள்கின்றனர்.
இவர்கள் இருவரும் செவ்வாய்கிரக ஆய்வில் ஈடுபடும் மூத்தபிரிவில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications