இந்திய அணி பாக். வரும் ... கிரிக்கெட் வாரியத் தலைவர் நம்பிக்கை
துபாய்:
இந்திய கிரிக்கெட் அணி திட்டமிட்டபடி வரும் ஜனவரி மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான்கிரிக்கெட் வாரியத் தலைவர் தாகிர் ஸியா தெரிவித்தார்.
இது தொடர்பாக துபாயில் வெளியாகும் பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டி:
அரசியலையும் கிரிக்கெட்டையும் தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடாது. இரண்டும் வேறுவேறு. அரசியல் பிரச்சினையை கிரிக்கெட் விளையாட்டில்காட்டக்கூடாது என்று நினைப்பவன் நான்.
பாகிஸ்தானுக்கு எதிராக சஹாரா கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்தியா மறுத்துவிட்டது. இதற்கு இந்தியா தெரிவித்த காரணங்களுக்கும் எந்தத்தொடர்பும் இல்லை.
இருப்பினும், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பத்துக்கு இணங்க இந்திய கிரிக்கெட் அணி வரும்ஜனவரி மாதம் பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கிறேன்.
இது தொடர்பாக இன்னும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவரிடம் பேசவில்லை. பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் வராதபட்சத்தில்,இந்தியாவுக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுற்றுப்பயணத்துக்கான வாய்ப்பும் மிகக் குறைவாகவே இருக்கும்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது.பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தைப் பொறுத்தவரை அப் பிரச்சினை முடிந்துவிட்டது.
இப்போது பாகிஸ்தான் வீரர்கள் ஒழுக்கமுடனும், தொழில் ரீதியாகவும் விளையாடி வருகின்றனர். தங்களது திறமையை வளர்த்துக் கொள்ள முயற்சிமேற்கொண்டுள்ளனர்.
மோயின்கானும், வாஸிம் அக்ரமும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக சிறப்பாக விளையாடி வருகின்றனர். தென் ஆப்பிரிக்காவில் 2003-ம் ஆண்டுநடைபெறும் உலகக் கோப்பை வரை இவர்கள் விளையாடவேண்டும் என்று விரும்புகிறேன் என்றார் ஸியா.
காஷ்மீர் பிரச்சினையைக் காரணம் காட்டி பாகிஸ்தானுக்கு எதிராக டொரான்டோவில் நடைபெறும் சஹாரா கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்தியாமறுத்துவிட்டது. கடந்த ஆண்டும் இப் போட்டியில் விளையாட இந்தியா மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications