சிட்னி ஒலிம்பிக்: ஹாக்கியில் தங்கம் வெல்ல வாய்ப்பு அதிகம் - தன்ராஜ் பிள்ளை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கிஆட்டத்தில் தங்கம் வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று இந்திய ஹாக்கி அணியின்முன்னாள் கேப்டனும், அணியின் மூத்த வீரருமான தன்ராஜ் பிள்ளை தெரிவித்தார்.

இதுதொடர்பாக இன்டியாஇன்போ.காம் இன்டர்நெட் செய்தித் தளத்துக்கு அவர் அளித்த பேட்டி:

இந்திய ஹாக்கி அணியின் ஆட்ட முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு சிட்னிஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

அனைத்து கால நிலையிலும், அனைத்து விதமான ஆடுகளத்திலும் விளையாடும் வகையில் இந்தியஅணியினருக்கு நன்றாகப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆட்டத்தையும் எவ்வாறு விளையாடுவது என்று ஆட்டத்துக்கு முன்பு நன்கு ஆராயப்படும். இது தவிரஇந்திய அணியினருக்குப் போட்டியாக இருக்கலாம் என்று கருதப்படும் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, கொரியா,ஸ்பெயின், போலந்து ஆகிய நாடுகளின் ஆட்ட முறைகள் நன்கு கவனிக்கப்படும்.

பிற நாடுகளின் ஆட்டத் திறன், ஆடும் முறை ஆகியவை பற்றி விடியோ கேஸட்டுகளும் உள்ளன. அவற்றைஅடிக்கடி போட்டுப் பார்த்து ஆட்ட முறையை எவ்வாறு மாற்றி அமைத்துக் கொள்வது என்று பரிசீலிக்கப்படும்.

முக்கியமாக பெனால்டி கார்னரை கோலாக மாற்றுவதற்கான பயிற்சி இந்திய வீரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.அது தவிர, பந்தை எதிரணி கோல் எல்லை வரை எவ்வாறு கடத்திச் சென்று கோல் போடுவது பற்றியும் நன்குபயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியினருடைய ஆட்டத் திறனுடன் ஓரளவு அதிர்ஷ்டமும், கடவுளின் அனுக்கிரகமும் கிடைத்தால்இந்திய அணிக்கு நிச்சயம் தங்கப் பதக்கம் கிடைக்கும்.

என்னைப் பொறுத்தவரை எனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி கோல் போடுவேன். மற்றவீரர்களுக்கும் பந்தைக் கடத்திக் கொடுப்பேன்.

இந்திய வீரர்களுக்கு வெளிநாடுகளில் ஆட வாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டும். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில்விளையாடிப் பயிற்சி பெறவேண்டும். அங்குதான் ஆட்ட நுணுக்கங்களை அதிகம் தெரிந்து கொள்ளமுடியும்.

ஹாக்கி விளையாட்டில் சிறந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஐரோப்பிய கண்டத்தில் மெல்ல மெல்ல நுழைந்தஹாக்கி இப்போது அங்கு சிறந்த இடத்தைப் பிடித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளும் ஹாக்கியில் சிறந்துவிளங்குகின்றனர்.

சிட்னி ஒலிம்பிக்தான் நான் விளையாட உள்ள கடைசி ஒலிம்பிக் போட்டியாகும். ஹாக்கியில் இருந்து ஓய்வு பெற்றபிறகு வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பது பற்றி இதுவரை நான் யோசிக்கவில்லை. 2 அல்லது 3 ஆண்டுகளுக்குப்பிறகு அது பற்றி யோசிப்பேன்.

நிச்சயம் பள்ளி மற்றும் கிளப்புகளுக்கு நான் பயிற்சி அளிப்பேன். எனது தாய் நாட்டுக்காக விளையாட எனக்குவாய்ப்பும், திறமையும் இருக்கும்வரை தொடர்ந்து விளையாடுவேன். அதற்குத் தான் நான் முன்னுரிமைகொடுப்பேன். அதுதான் எனக்குக் கிடைக்கும் பெருமை என்றார் தன்ராஜ் பிள்ளை.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+