கருணாநிதி, கிருஷ்ணா தீவிர ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சந்தன வீரப்பனிடமிருந்து கன்னட நடிகர் ராஜ்குமார் உள்ளிட்ட நால்வரை மீட்பதுதொடர்பாக சென்னையில் வெள்ளிக்கிழமை கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவும். தமிழக முதல்வர் கருணாநிதியும் அவசர ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையில் இரு மாநில அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அரசு தூதர்நக்கீரன் கோபாலும் கலந்து கொண்டார்.

கடந்த ஜுன் 30-ம் தேதி நள்ளிரவு நடிகர் ராஜ்குமார் உள்ளிட்ட நால்வர், வீரப்பன்கும்பலால் கடத்தப்பட்டனர். அவர்களை காட்டில் பிணைக் கைதிகளாக வைத்துக்கொண்டு வீரப்பன் இரு மாநில அரசுகளுக்கும் 10 கோரிக்கைகலைள விடுத்துள்ளான்.

தமிழக சிறையில் உள்ள ஐவர் விடுதலை, கர்நாடக சிறையில் உள்ள 51 தடா கைதிகள்விடுதலை, காவிரிப் பிரச்சனைக்கு தீர்வு, கர்நாடகாவில் தமிழுக்கு ஆட்சிமொழிஅந்தஸ்து என்று அடுக்கடுக்காக அவன் விடுத்த கோரிக்கைகளினால் மிரண்டு போனஇரு மாநில அரசுகளும் இது பற்றி ஆலோசித்து பல கோரிக்கைகளை ஏற்க முன்வந்தன.

மாநில அரசுகள் ஏற்றுக் கொண்டாலும், சட்ட நடைமுறைச் சிக்கல்களால் அதுதடைபட்டு வருகிறது. இந்நிலையில் இரண்டாவது முறையாக அரசின்ஆதாரப்பூர்வமான விளக்கங்களுடன் காட்டுக்குச் சென்ற அரசு தூதர் கோபால்,வியாழக்கிழமை சென்னை திரும்பினார்.

இம்முறையும் வீரப்பன் கொடுத்தனுப்பிய வீடியோ கேசடடுடன் வந்த தூதர், அதைதமிழக முதல்வரிடம் ஒப்படைத்தார். அந்த கேசட் மூலம் வீரப்பனின் பிடிவாதம்தளரவில்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றிதீர்மானிப்பதற்காக கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா வெள்ளிக்கிழமை காலைசென்னை வந்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியை அவர் சந்தித்தார்.இரு மாநில முதல்வர்களும் வீரப்பன் விவகாரம் தொடர்பாக விவாதித்தனர். பின்னர்இருமாநில அரசுகளும் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் 11 மணியளவில்தொடங்கியது.

தமிழக அரசின் சார்பில் முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி,துரைமுருகன், தலைமைச் செயலாளர் முத்துசாமி, உள்துறைச் செயலாளர் சாந்தா ஷீலாநாயர், போலீஸ் டி.ஜி.பி. சர்மா, கூடுதல் டி.ஜி.பி. அலெக்சாண்டர்.

கர்நாடக அரசின் சார்பில் முதல்வர் கிருஷ்ணா, உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன்கார்கே, உள்துறை முதன்மைச் செயலாளர் பிரகாஷ். போலீஸ் டி.ஜி.பி. தினகர், கூடுதல்டி.ஜி.பி. சீனிவாஸ் மற்றும் இரு மாநில அரசுளின் தூதர் நக்கீரன் கோபால், நக்கீரன்இணை ஆசிரியர் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+