மத்திய அமைச்சர் தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு
சென்னை:
பா.ம.க.வை சேர்ந்த மத்திய அமைச்சர் என்.டி.சண்முகத்தின் தேர்தல் வெற்றியை எதிர்த்து அ.தி.மு.க தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம்விசாரணைக்கு அனுமதித்தது. மத்திய அமைச்சர் சண்முகத்திற்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ம.க சார்பில் போட்டியிட்டவர் என்.டி.சண்முகம். இவரை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் முன்னாள் தமிழகஅமைச்சர் முகமது ஆசிப் போட்டியிட்டார். சண்முகத்தின் வெற்றியை எதிர்த்து இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
தேர்தலின்போது என்.டி.சண்முகம் பிரச்சாரத்திற்காக 200க்கும் மேற்பட்ட வாகனங்களை பயன்படுத்தினார். ஓட்டுச்சாவடிக்கு நிறைய வாகனங்களில்வாக்காளர்களை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தார். பா.ம.க. வுக்கு ஓட்டுப் போடும்படி வாக்காளர்களை வற்புறுத்தினார்.
பல இடங்களில் தில்லுமுல்லு நடந்தது. கள்ள ஓட்டுக்களும் போடப்பட்டன. இதுபற்றிய புகார்களை போலீஸ் கண்டு கொள்ளவில்லை. எனவே சண்முகம்வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று வழக்கில் ஆசிப் கோரியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி சதாசிவம் விசாரணைக்கு அனுமதித்தார். இதுபற்றி 6 வாரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு அமைச்சர் சண்முகத்திற்கும்,தேர்தல் அதிகாரிக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications