வியாழனின் துணைக் கோள் ஈரோபாவில் உயிரினம் இருக்கலாம்?

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

வியாழன் கிரகத்தின் துணைக் கோள் ஈரோபாவில் உயிரினம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோபா துணைக் கோளை நெருங்கிச் சென்று கலிலியோ விண்கலம் எடுத்தனுப்பிய புகைப்படத்தை ஆராய்ந்து இத் தகவலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோபாவின் வெளிப்புறப்பரப்பு முழுவதும் பனியால் உறைந்துள்ளது. சுமார் 7.5 கிலோமீட்டர் உயரத்துக்கு இந்த பனிப்படலம் உள்ளது.

அதற்கு உள்ளே உப்பு நீர்க் கடல் இருப்பதாகவும், அங்கு உயிரினம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

வியாழன் கிரகத்தின் 4-வது பெரிய துணைக் கோள் ஈரோபா. வியாழன் கிரகத்தில் உயிரினம் இருக்கிறதா என்பதை ஆராய கலிலியோ விண்கலம்அனுப்பப்பட்டது. அது வியாழன் கிரகம் தவிர அதன் துணைக் கோள்களையும் படம் பிடித்து அனுப்பியது.

கடந்த ஜனவரி 3-ம் தேதி வியாழன் கிரகத்தின் துணைக் கோளான ஈரோபாவை நெருங்கிய கலிலியோ விண்கலம் ஏராளமான புகைப்படங்களை எடுத்துஅனுப்பியது.

அப் புகைப்படங்களை விஞ்ஞானிகள் முழுமையாக ஆராய்ந்தனர். ஈரோபா துணைக் கோளின் வெளிப்புறப்பரப்பு முழுவதும் கடினமான பனிப் படலத்தால்மூடப்பட்டுள்ளது. ஆங்காங்கே பெரிய பெரிய வெடிப்புகள் உள்ளன.

அதற்குக் கீழே நீர் நிரம்பிய கடல் உள்ளது. ஈரோபாவுக்கும், தாய் கிரகமான வியாழனுக்கும் இடையே ஈர்ப்பு விசை இருப்பதால் பனிப்படலத்துக்குக் கீழே உள்ள கடல் பகுதி வெப்பமாக உள்ளது. இதனால், அங்கு உயிரினம் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

கலிலியோ விண்கலம் எடுத்து அனுப்பிய புகைப்படங்களை ஆராய்ந்தபோது, ஈரோபாவின் புறப்பரப்பில் உள்ள பனிப்படலம் அவ்வப்போது உடைந்து பிறகுமீண்டும் ஒன்று சேர்ந்து வருகிறது என்று தெரிகிறது.

நீர் நிரம்பிய கடல் பரப்பின்மீது இந்த பனிப்படலம் இருந்தால்தான் இவ்வாறு நேரும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

கலிலியோ விண்கலம் எடுத்தனுப்பிய ஈரோபாவின் காந்தப்புலம் பற்றிய புகைப்படங்கள், பனிப்படத்துக்குக் கீழே உப்பு நீர்க் கடல் இருப்பதற்கானவாய்ப்புகள் அதிகம் என்பதை உணர்த்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+